பக்கம்:இல்லற நெறி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இல்லற நெறி


வந்து தங்குகின்றன. பென் இளமைப் பருவம் எய்தும் பொழுது இவை நன்கு முதிர்ந்து இனப்பெருக்கத்திற்குக் காத்து நிற்கின்றன. இந்த அணுக்களே பெண் கரு அணுக் கள் 99 (முட்டைகள்) என்று வழங்கப்பெறுகின்றன. ஒவ் வொரு சூற்பையிலும் குழந்தை பிறக்கும்பொழுது 30,000 கரு அணுக்கள் உள்ளன. பெண் 'பெரியவளாகி அவளது உறுப்புகள் யாவும் வளம்பெற்றுத் தாயாக ஆவதற்குத் தகுதி பெற்றதும் இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சூற்பைகளிலுள்ள கரு அணுக்களில் ஒன்று மெல்ல வளர்ந்து மேல்தோல் அருகில் வந்து தங்கிக்கொள்கின்றது. கருவுறுத லுக்கேற்றவாறு அது முதிர்ச்சியடைந்ததும் மாதவிடாய் ஆன சில நாட்களுக்குப் பிறகு சூற்பையின் தோலைப்பிளந்து கொண்டு வெளியே வந்து கருக்குழலின் குஞ்சம் போன்ற பகுதியால் கவரப்பெற்று கருப்பையை அடைகின்றது. ஒரு பெண்ணின் சூற்பையிலுள்ள பல்லாயிரக்கணக்கான கரு அணுக்களில் ஒரு சில நூறு அணுக்களே (400 அணுக்கள்) முழு வளர்ச்சியுற்றுப் பெண் கரு முட்டைகளாகின்றன. ஒரு பெண்ணின் இனப்பெருக்க வாழ்வு கிட்ட்த்தட்ட முப்பதுயாண்டுகளே யாதலாலும், அவள் யாண்டொன்றுக் குப் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று முட்டைகளையே வெளிப்படுத்தக்கூடுமாதலாலும் அவள் தன் வாணுளில் வெளிப்படுத்தக்கூடிய முதிர்ச்சியடைந்த முட்டைகளின் எண்ணிக்கை நானுாறுக்குமேல் போவதில்லை என்பதை அறிவாயாக,

இதுகாறும் கூறியவற்ருல் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் பெண்ணின் உடலினுள் இருக்கும் உறுப்புகளை மட்டிலும் தெரிந்துகொண்டாய். இனி சூற்பைகளில் முட்டை பக்குவமாதல், பெண் முட்டையின் தன்மை, அது கருவுறும் முறை முதலியவைபற்றிய செய்திகளை அடுத்த கடிதத்தில் விளக்குவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான். 106. பெண் கரு அணுக்கள்-0wa;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/132&oldid=1285141" இலிருந்து மீள்விக்கப்பட்டது