பக்கம்:இல்லற நெறி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 127

11

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு.

நலன். நலனேயாகுக:

முட்டை பக்குவமாதல்: ஒரு பெண்ணின் சூற்பைகளில் பல்லாயிரக்கணக்கான கரு அணுக்கள் இருந்தும் ஒரு சில நூறு அணுக்களே வளர்ச்சியுற்றுப் பெண் கரு முட்டைகளா கின்றன என்று குறிப்பிட்டேன் அல்லவா? ஒரு பெண் பருவம் அடைந்த நாள் தொட்டு' கரு அணுக்கள் முதிர்ச்சியடை தல் தொடர்ந்து நடைபெறுகின்றது. ஒரு குறிப்பிட்டபருவ காலம் இடையிட்டு இடையிட்டுப் பழைய அணுக்கள் முதிர்ந்து வளரத் தொடங்குகின்றன: இருபத்தெட்டு நாட் களுக்கு ஒரு முறை இந்த அணுக்களில் பல, அளவில் பெருக்கமுற்றுத் தொடர்ந்து பல்வேறு மாறுபாடுகளை அடைகின்றன. இந்த முட்டைகளில் ஒன்று ஏனையவற்றை விட மிகப் பெரிதாகித் தன்னைச் சுற்றிலும் ஒரு சிறிய அரணை அமைத்துக்கொள்ளுகின்றது. இந்த அரணைப்பற்றி இ. பி: 1872-இல் முதன் முதலாக கிராஃப் என்ற டச்சு உடற் கூற்றியலறிஞர் விளக்கியதனுல் இது "கிராஃபியன் ஃபாலிக்கிள்' என்றே வழங்கப் பெறுகின்றது. இந்த அரண் ஒருவித திரவப் பையினலானது. இந்தத் திரவத்தில் எஸ்ட்ரோஜன்' என்ற ஒருவித ஹார்மோன் உற்பத்தி யாகின்றது. இதில் ஒரு பகுதி குருதிமூலம் உடலெங்கும் பரவி உடல் வளர்ச்சியில் பெரும்பகுதியைஆட்சிபுரிகின்றது. பெண்களுக்கு இயற்கையாகவே உள்ள மெல்லிய குரல், செழுமையான உடற்கட்டு, உருண்ட கொங்கைகள், வழு

107. பூப்பு, பருவமடைதல்-Puberty. 108. Glg TLi-Graaf: 109; άμττάι?uêr $tumraάάδόir—Graafiam follicle | 10. Gravi. Gormggðr-Estrogen,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/133&oldid=597880" இலிருந்து மீள்விக்கப்பட்டது