பக்கம்:இல்லற நெறி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 129

விரிகின்றது. எழும்பும் பந்தை ஏற்கும் கைகள்போல் இப் புனல்பகுதி விரிந்து நிற்கின்றது. எனவே,வெடித்த ஃபாலிக் கிளினின்றும் உந்தப்பெற்ற முட்டை கருக்குழலின் புனல் போன்ற பகுதியால் ஏற்கப்பெறும்வரை ஒரு நொடியில்' மிகச் சிறிய காலமே அடிவயி :றில் தங்குகின்றது! முதிர்ச்சி யடைந்த முட்டை சூற்பையினின்றும் வெளித்தள்ளப் பெறுதலையே நாம் 'முட்டை பக்குவமடைதல் 1’ என்று வழங்குகின்ருேம். முதிராத பல முட்டைகளும் முதிர்ச்சி யுற்ற இரண்டு முட்டைகளும் சூற்டையிலிருப்பதைப் படத் தில் காண்க (பட-ம்16).

கார்ப்பஸ் லூட்டியம்: முட்டை பக்குவமடைதல்நிகழ்ந்த வுடன் கிராஃபியன் ஃபாலிக்கிளில் சிலமாறுதல்கள் நிகழ்கின் றன. இது காய்ந்து மஞ்சள் நிறமாகவும் கடினமாகவும் ஆகி விடுகின்றது. இந்நிலையில் இது ‘கார்ப்பஸ் லூட்டியம்' என்று வழங்கப்பெறும். கருக்குழலில் சென்று தங்கிய முட்டை கருவுற்ருல் இந்தக் கார்ப்பஸ் லூட்டியம் என்னும் அமைப்பு நன்ருக வளர்ந்து கொண்டு போகும். இது கருப்ப காலம் முழுவதும் மறையாதிருந்து கருவுயிர்த்தபின்புதான் மறையும். இதில் ஊறும் புரோஜெஸ்டெரோன்' என்னும் ஹார்மோன் இனப்பெருக்கத்தில் பெரும் பங்கு கொள்ளு கின்றது. இது குருதியில் பரவி, கருப்பையை அடைந்து, அதனுடைய தசைகளுக்கு நல்ல வலுவை ஊட்டுகின்றது. இந்த ஹார்மோன் தேவைக்குக் குறைவாக உற்பத்தி செய் யப் பெற்ருல் கருப்பை போதிய ஆற்றலின்றிச் சுருங்கத் தொடங்குகின்றது. இதல்ை கருச்சிதைவு நிகழ்கின்றது. தற்காலத்தில் இந்த ஹார்மோனை ஊசிமூலம் குத்திப்புகுத்தி மருத்துவர்கள் கருச் சிதைவைத் தடுக்க முயல்கின்றனர்.

I 12. Goporto-Second; 113. முட்டை பக்குவமடைதல்-Ovulation) 114. Grifihligio GMTLIą.ulb-Corpus luteum: 115. L;GirtrøgsioGl-Gamsir-Progesterone.

劍→9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/135&oldid=597884" இலிருந்து மீள்விக்கப்பட்டது