பக்கம்:இல்லற நெறி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இல்லற நெறி


திங்கள்தோறும் ஒரே ஒரு முட்டைதான் வெளியேற்றப் பெறுகின்றது என்று சொன்னேன். இச் செயலை இரண்டு சூ ற்பைகளும் எவ்வாறு பகிர்ந்துகொள்ளுகின்றன என்று நீ கேட்கலாம். கூறுவேன்; ஒரு சமயத்தில் ஒரு சூற்பைதான் செயற்படுகின்றது என்பது இன்றைய மருத்துவ இயலாரின் துணிபு. சிறிது காலத்திற்கு முன்பு மாதத்திற்கொரு குற் பையாக மாறி மாறி செயற்பட்டது என்று நம்பப்பெற்றது. அத்தகைய கால ஒழுங்கோ முறையோ இல்லை என்பதுதான் இன்றைய நம்பிக்கை. ஒரு சூற்பை தொடர்ந்து பல மாதங் கள் செயற்படலாம் என்றும், அதன்பிறகு அடுத்த சூ ற்பை செயற்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இன்னெரு முக்கிய செய்தியையும் ஈண்டு நீ அறிதல் வேண்டும். ஒரு சூ ற் பையை நீக்கிவிட்டாலும், மற்றது அந்த இழப்பை ஈடு செய்யும். அது மாதந்தோறும் ஒரு முட்டையை உற்பத்தி செய்து பெண்ணின் இனப்பெருக்கத் திறன் எவ்விதத்திலும் கெடாமல் பாதுகாக்கும்:

ஆணின் விந்தணுக்கள் கலவியின்பொழுது வெளிப்படு வதைப்போலவே பெண்ணின் முட்டைகளும் கலவியின் பொழுதுதான் வெளிப்படுகின்றனவா என்று கேட்டிருந் தாய், மானிடப் பெண்ணைப் பொறுத்தமட்டிலும் அவ்வா றில்லை; குழி முயல், பூனை போன்ற சில விலங்கினங்களில் முட்டை வெளிப்படுவதற்குக் கலவியே தூண்டுதலாக அமை கின்றது; புணர்ச்சிக்குப் பின்னரே முட்டை வெளிப்படுதல் நிகழ்கின்றது. ஆனால், மானிடப்பெண்ணிடம் கலவியிருப் பினும் இல்லாவிடினும் கரு அணுக்கள் முதிர்ந்து சூற்பைகளி லிருந்து வெளியேறுகின்றன. ஒரு முட்டை நன்கு முதிர்ந்து வெளிவரும் நிலயிலிருக்கும்பொழுது புணர்ச்சிச் செயல் 'முட்டை பக்குவமடைதலைத் துரிதப்படுத்தலாம். ஆனல், அஃது இன்னும் வாதத்திற்கிடமாகவே உள்ளது.

மாதவிடாயும் முட்டை பக்குவப்படுதலும்: பெண்ணின் கரு அணு வெளிப்படுதலுக்கும் அவளிடம் காணப்பெறும் மாதவிடாய் ஒழுங்கிற்கும் யாதாவது தொடர்புள்ளதா என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/136&oldid=1285143" இலிருந்து மீள்விக்கப்பட்டது