பக்கம்:இல்லற நெறி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்ப்டையில் திருமணம் #31

றும் வினவியிருந்தாய். உண்மையில் இந்த இரண்டு செயல் களுக்கம் உடலியலடிப்படையில் தொடர்பு இருக்கத் தான் செய்கின்றது மாதவிடாய் ஒழுக்கின் தோற்றத்திற்குக் காரணமாகவுள்ள அமைப்பிலும் செயல்களிலும் காணப் பெறும் மாற்றங்கள் பெரும்பாலும் சூற்பைகளின் செயல் களைப் பொறுத்தே நடைபெறுகின்றன என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பெற்ற உண்மையாகும். முட்டை வெளிப் படுவதற்கு முன்னரும், வெளிப்படும்போதும், வெளிப்பட்ட பின்னரும்முதிர்ச்சியுறும்முட்டையின் ஃபாலிக்கிளில் உற்பத் தியாகும் ஹார்மோன்கள்தாம் மாதவிடாயைத் தொடக்கி வைக்கின்றன. இன்னுெரு முக்கி ப செய்தியும் ஈண்டு நீ அறிதற்பாலது. முட்டை வெளிப்படுதலும் மாதவிடாப் நிகழ்தலும் ஒரே சமயத்தில் நடைபெறுவதில்லை. இரண்டு மாதவிடாய்கள் நிகழும் இடைக்காலத்தின் நடுவில்தான் முட்டை பக்குவமடைதல் நடைபெறுகின்றது. சூற்பையி லிருந்து முட்டை வெளிப்படுதலும் அதனை அடுத்து ஃபாலிக் கிளில் நடைபெறும் மாற்றங்களும்தான் அடுத்த மாதவிட்ா யைத் தொடங்கச் செய்கின்றன என்று கருதுகின்றனர். அஃதாவது, முட்டை பக்குவமடைந்த பதினன்கு அல்லது பதினறு நாட்களுக்குள் மாதவிடாய் நிகழ்ந்து விடுகின்றது; எனினும், சில சந்தர்ப்பங்களில் முட்டை பக்குவமடையாம லேயே மாதவிடாய் நிகழ்தலும், மாதவிடாய் நிகழா மலேயே முட்டை பக்குவமடைதலும் உண்டு என்பதையும் நீ அறிந்துகொள்ள வேண்டும். சாதாரணமாக ஒரு பெண் தன்னிடம் எப்பொழுது முட்டை பக்குவமடைதல் நிகழ் கின்றது என்பதை உணர்ந்து சொல்ல முடியாது.

முட்டையணு: இனி, பெண்ணின் கரு அணுவைப்பற்றிக் சிறிது கூறுவேன். அமைப்பிலும் வடிவத்திலும் பெண் கரு அணு ஆணின் விந்தணுவினின்றும் முற்றிலும் மாறுபட்ட தாகும். பெண் கரு அணு கோள வடிவுடையது; அதற்கு நகர்ந்து செல்லும் ஆற்றலில்லை. அஃது ஒரிடத்தில் நிலையாக அசைவற்றுக் கிடக்கும். அது விந்தணுவைவிடப் பெரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/137&oldid=597887" இலிருந்து மீள்விக்கப்பட்டது