பக்கம்:இல்லற நெறி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இல்லற நெறி


அதன் குறுக்குவிட்டம் 11200 அங்குலமுள்ளது; அவ்வணு ஊனக் கண்ணுக்குப் புலனுகக் கூடியது: அப்படியிருப்பினும் அது மிகவும் சிறியதே. சாதாரணமாக அச்சிடப்பெற்றுள்ள ஒரு பக்கத்தில் காணப்பெறும் ஒரு முற்றுப்புள்ளியைவிட அது மிகவும் சிறிதாகவே உள்ளது என்று சொல்லலாம். முட்டையின் வெளிப்புறம் சளிபோன்ற சுவரால் சூழப் பெற்று, உட்புறம் மிக அதிகமான எண்ணிக்கையில் மிகச் சிறிய கொழுப்புத் துணுக்குகளால் நிரப்பப் பெற்றுள்ளது. இது மஞ்சட்கரு' என்று வழங்கப் பெறுகின்றது. அணு வின் நடுவில் அல்லது அதன் ஒரு புறத்தில் உட்கரு' இருக் கின்றது. இந்த உட்கரு தாய் வழியாக இறங்கக்கூடிய பண்புகளைத் தாங்கி நிற்கும் ஜீன்களையுடைய நிறக் கோள்களைக் கொண்டுள்ளது.

மானிட முட்டை-கோழிமுட்டை: ஒற்றுமை: முக்கிய அமைப்பில் மானிட முட்டையும் பறவையின் முட்டையும் ஒன்று போலவே உள்ளன. ஆனால், மானிட முட்டை சிறியது; கெட்டியான ஒட்டினல் மூடப்பெறவில்லை; இவையே வேற்றுமைகள். முட்டையின் உள்ளே சேமித்து வைக்கப் பெற்றுள்ள ஊட்டப் பொருள்களின் அளவே முட்டையின் அளவு வேற்றுமைக்குக் காரணம் என்பதை நீ உணர்வாயாக. பெட்டைக் கோழியின் முட்டை தாயின் வயிற்றில் தங்குவதில் ல; அது வெளியில் வந்த பிறகே அடைகாக்கப் பெறுகின்றது. தாயின் சார்பின்றியே குஞ்சு முட்டையில் வளர்வதால், முட்டை வெடித்துக் குஞ்சு வெளிவரும் வரையிலும் வளரும் இளஞ்சூலுக்கு வேண்டிய உணவுப்பொருள்களே முட்டைகொண்டிருத்தல் வேண்டும்: தவிரவும், குஞ்சைப் பாதுகாக்க ஒர் ஒடும் வேண்டும். மானிட இனத்தின் வளர்ச்சி முறையே முற்றிலும்வேருனது: முட்டை கருவுற்றதும் அது தாயின் உடலிலேயே பல

116; மஞ்சட்கரு-Yoikே 117, 2.1.5@5-Nucleus.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/138&oldid=1285144" இலிருந்து மீள்விக்கப்பட்டது