பக்கம்:இல்லற நெறி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 133

மாதங்கள் தங்குகின்றது; தாயினிடமிருந்தே அது நேராகத் தொடர்ந்து ஊட்டத்தைப் பெறுகின்றது. முட்டையில் உணவுப் பொருள்கள் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லையாதலின், மானிட முட்டை மிகவும் சிறிதாகவே உள் ளது. இரண்டு முட்டைகளின் வளர்ச்சியும் படத்தில் (படம்-17) காட்டப்பெற்றுள்ளது; உற்று நோக்கித் தெளிவு பெறுக.

படம்-17: மானிட முட்ட்ை-கோழிமுட்டை இரண்டிலும்

கருவின் வளர்ச்சியைக் காட்டுவது. (12 நாட்கள் நிறைவு பெற்ற கோழிக் குஞ்சியின் இளஞ்சூல் இது. முட்டையில் எல்லா ஊட்டப் பொருள் களும் நிறைந்துள்ளன. மானிட இளஞ்சூல் உட்பட எல் லாப் பாலுண்ணிகளின் இளஞ்சூல்களும் தாயின் குருதியிலி ருந்தே நஞ்சு, கொப்பூழ்க் கொடிகளின்மூலம் எல்லா ஊட் டப் பொருள்களையும் பெறுகின்றன. இங்குக் காட்டப் பெற்றுள்ளது 5 மாதங்கள் நிறைவு பெற்ற முதுகுல்.)

முட்டை கருவுறுதல்: பெண் முட்டை எவ்வாறு கரு வுகின்றது என்பதைக் காண்போம். புணர்ச்சியின்பொழுது எண்ணற்ற விந்தணுக்கள் வெளிப்படுகின்றன என்பதையும். சூற்பையிலிருந்து பெண் முட்டை எவ்வாறு வெளிப்படு கின்றது என்பதையும் நீ நன்கு அறிவாய். விந்தனுக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/139&oldid=597891" இலிருந்து மீள்விக்கப்பட்டது