பக்கம்:இல்லற நெறி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இல்லற நெறி


கருப்பையை அடைந்து அதன் பின்னர் கருக் குழல்களினுள் நுழைந்து பெண் முட்டையைச் சந்தித்து அதனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. இதனைப் படம் (படம்-18) விளக்கு கின்றது. -

இந்த விந்தணுக்களில் மிக வன்மையான ஓர் அணு முட்டையைத் துளைத்து வாலறுபட்டு முட்டையினுள் புதைந்து கொள்ளுகின்றது. இதுவே கருவுறுதல் என்பது: இதன் பிறகு முட்டை வேறு விந்தணுக்கள் தன்னுள் நுழை வதற்கு இடம் கொடுப்பதில்லை. எனவே, கருவுறுதல் கருக் குழலிலேயே நடைபெறுகின்றது.

இ A-ಆಜಿಘೀ

கருககுழலின go to

படம்-18: முட்டையணுவை விந்தனுக்கள் சூழ்ந்து

கொண்டிருப்பதைக் காட்டுவது: கருப்பையின் செயல்: கருவுற்ற முட்டை கருப்பையை நோக்கி;வருவதைக் கார்ப்பஸ் லூட்டியம் என்னும் அமைப்பு ஹார்மோன் தந்திகளினுல்” கருப்பைக்கு உணர்த்தி முட்டையை ஏற்பதற்குத் தயாராக இருக்குமாறு ஏவுகின் றது. கருப்பையும் இக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தன்னு டைய சளிச்சவ்வினைத் தளர்த்தி முட்டை தன்னுள்ளே புதைந்து கொள்வதற்குத் தன்னைத் தயாராக்குகின்றது இந்நிலையைப் படத்தில் காண்க (படம்-19), இங்ங்னம் புதைந்துகொண்ட முட்டை சளிச்சவ்விலிருந்து ஊட்டத் தைப் பெற்று இளஞ்சூலாக வளர்கின்றது. இவ்வாறு முட்டை புதைந்து கொள்வதற்குமுன் கருப்பை அசையா

418. &Qjoyggjá-Fertilizetions

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/140&oldid=1285145" இலிருந்து மீள்விக்கப்பட்டது