பக்கம்:இல்லற நெறி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் isd

திருத்தல் வேண்டும்; அசைந்தால் முட்டை புதைந்து கொள் வது தடுக்கப்பெறுகின்றது. கருப்பையின் துடிப்பு அடித் தலைச் சுரப்பியினுல் ஆட்சி செய்யப் பெறுகின்றது. கார்ப் பஸ் லூட்டியம் இந்தச் செல்வாக்கினைத் தடுத்துச் சிறிது காலம் கருப்பையை அசையாதிருக்குமாறு செய்கின்றது. இந்தக் காலத்தில்தான் முட்டை கருப்பையில் புதை கின்றது.

`ఫ్గ படம்-19: கருவுற்ற முட்டையணு கருப்பையில்புதைத்து

கொள்ளுவதைக் காட்டுவது,

கருவுற்ற முட்டை கருப்பையில் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தங்குகின்றது. இக்காலத்தில் அது குழந்தை யாக வெளிவரும் வரையில் பல வியத்தகு மாற்றங்களையும் வேறுபாடுகளையும் அடைகின்றது. கருப்பை முதுசூலின்' வளர்ச்சிக்கும் ஊட்டத்திற்கும் ஓர் அடைகாக்கும் கருவி போல்' அமைகின்றது. கருப்பையாகிய கூட்டினுள்

119. opged–Foetus. 120. அடைகாக்கும் கருவி-incubatorg

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/141&oldid=597897" இலிருந்து மீள்விக்கப்பட்டது