பக்கம்:இல்லற நெறி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இல்லற நெறி


இளஞ்சூல் பாதுகாப்பையும் வெதுவெதுப்பையும் பெறுவ துடன் ஊட்டத்தையும் அடைகின்றது. முட்டையிலுள்ள சிறிய அளவு உணவுப்பொருள்கள் தொடக்கத்தில் முட்டை யின் வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. அதன் பிறகு முட்டை வேறு மூலத்திலிருந்தே உணவினைப் பெறவேண்டும். தாயின் உடலிலிருந்து இதனைப் பெறுகின்றது முட்டை புதைந்துகொண்ட இடத்திலிருந்து வளர்ந்த ஒர் உறுப் பின் மூலம் இதனைப் பெறுகின்றது. இச் செயலைப் பின்னர் விளக்குவேன்; கருப்ப காலத்தின் இறுதியில் குழந்தை வெளி வருவதற்குத் தயாராக இருக்கும்பொழுது கருப்பையின் வலுவான தசைச் சுவர்கள் சுருங்கி குழந்தையைத் தாயின் உடலினின்றும் வெளியே தள்ளிவிடுகின்றது:

கருவுருத முட்டை கருப்பையை வந்தடைந்த பிறகு சிதைந்தழிந்து உடலினுள் கவரப்பெறுகின்றது; அல்லது அடியிலுள்ள கருப்பையின் வாய்வழியாக வெளியேறுகின் றது. இவ்வாறு முட்டை வெளிவருவதைப் பெண் உணர முடியாது; அவளுக்கு அதனுல் யாதொரு உணர்ச்சியும் ஏற் படுவதில்லை. இன்னும் ஒர் முக்கிய செய்தியையும் ஈண்டு நீ அறிந்துகொள்ள வேண்டும். ஒரு பெண் கருப்பமுற்றிருக் கும் ஒன்பது மாத காலத்திலும் கருவுயிர்த்த சில மாதங்கள் வரையிலும் (அதாவது குழந்தைக் குப் பாலூட்டும் காலத் தில்) புதிய முட்டைகள் முதிர்வதில்லை; மாதவிடாயும் ஏற்படுவதில்லை.

பெண்ணின் பிறப்புறுப்புகளே அறிந்துகொள்ளும் நீ அவளது வாழ்க்கையில் மாதந்தோறும் நிகழும் மாதவிடா யைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்; இதனை அடுத்த கடிதத்தில் விரிவாக விளக்குவேன்;

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/142&oldid=1285146" இலிருந்து மீள்விக்கப்பட்டது