பக்கம்:இல்லற நெறி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 137

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு, நலன், நலன் பல விளைக.

மாதவிடாய்: பெண் பிறவியின் ஒரு முக்கிய கூறு ஆகிய மாதவிடாயைப்பற்றி இக்கடிதத்தில் விளக்குவேன். கருப் ையினின்று மாதந்தோறும் வெளிப்படும் குருதிக் கசிவினைத் தான் மாதவிடாய்12 என்று வழங்குகின்றனர். மாதப்பூப்பு, மாத ருது, வீட்டுத்துாரம், வீட்டுவிலக்கு, தலைமுழுக்கு, தீட்டு முதலிய சொற்கள் யாவும் மாதவிடாயைக் குறிக்கும் ஒருபொருட் பன்மொழிகளாகும். கருப்ப காலம், தாய் குழவிக்குப் பால் கொடுக்கும் காலம் ஆகியவை தவிர ஒரு பெண்ணுக்குப் பூப்பு எய்திய காலத்தில் தொடங்கும் மாத விடாய் சாதாரணமாக ஐம்பது வயது வரை மாதந்தோறும் முறை தவருது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். சாதா ரணமாக, பத்தொன்பது அல்லது இருபது வயதுவரை எந்த வயதிலும் ஒரு பெண் முதல் மாதவிடாயை-பூப்பைஅடையலாம். வெப்பம் மிக்க நாட்டில் வாழும் பெண்கள் சிறு வயதிலேயே பூப்படைகின்றனர். குளிர்ந்த நாட்டில் சற்று வயதாகிய பின்னரே பருவம் எய்துகின்றனர். வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வும் ஒரளவு மாதவிடாயைப் பாதிக்கின்றது. வறு மையிலும் உழைப்பிலும் உழலும் பெண்கள் சற்று வயதான பின்னரும், செல்வத்திலும் நாகரிக வாழ்விலும் வளரும் பெண்கள் ஒன்பது வயதிலேயும் பெரியவளாகிவிடுகின்றனர். எனவே, ஒரு பெண் பருவமடைதலில் காணப்பெறும் வயது வேறுபாடு அவள் வாழும் நாட்டின் வெப்பநிலை, அவளது

121. unmascăl-mü-Menstruation;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/143&oldid=597899" இலிருந்து மீள்விக்கப்பட்டது