பக்கம்:இல்லற நெறி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இல்லற நெறி


தன்மை, வெகுளித்தனம் முதலியவை மறைந்து அவற்றிற் குப் பதிலாகக் கூச்சம், நாணம், காமக் குறிப்புடைய நோக்கு முதலியவை யாவும் இளமைப் பருவப் பெண்ணிடம் வந்து குடிகொண்டுவிடுகின்றன.

ஒரு பெண்ணிடம் முதன் முதலாகத் தோன்றும் மாத விடாய் திடீரென்று நேரிடலாம். சில சமயம் அவள் பூப் பெய்துவதற்குச் சில திங்கள்கட்கு முன்னமே தலைவலி, மயக் கம், பசியின்மை போன்ற அறிகுறிகள் அடிக்கடி ஏற்பட்டுத் தொந்தரவு பண்ணிக் கொண்டிருக்கலாம். கன்னிப் பெண் களுக்குத் திங்கள்தோறும் நிகழும் மாதவிடாயின்பொழுது வயிற்று நோவு அதிகம் ஏற்படலாம். கருப்பையின் வாய் மிகவும் சிறுத்து இருப்பதனுல் மாதவிடாயின்பொழுது குருதியை வெளியேற்றக் கருப்பை வேகமாகச் சுருங்கவேண் டியுள்ளது. அதனல் வயிற்றுவலி ஏற்படுகின்றது. இந்த வலியை ஆஸ்பரின் போன்ற மருந்துகளை யுண்டு தணித் துக் கொள்ளலாம். வயிற்றின்மீது வெந்நீர்ப்பை வைத்துச் சூடான ஒற்றடம் போட்டுக்கொண்டாலும் வயிற்று நோவு தணியும். மலச்சிக்கல் இன்றி உடல்நலப் பழக்க வழக்கங் கள் உள்ள பெண்களிடம் பெரும்பாலும் மாதவிடாயின் பொழுது வயிற்று நோவு தலைக்காட்டுவதே இல்லை.

கருப்பையில் மாற்றங்கள்: இனி, மாதவிடாய் ஏற்படும் விதத்தை அறிவியல் அடிப்படையில் ஒருசிறிது விளக்குவேன். ஒரு பெண் சூல் கொள்ளாதபொழுது அவள் மாதந்தோறும் எண்டோமெட்ரியத்தைக் கழித்து நீக்குவதே மாதவிடாய் என்பது. கருப்பையின் உட்புறம் போர்த்துக்கொண்டிருக் கும் மெல்லிய சளிச்சவ்வே எண்டோமெட்ரியம்' என்று வழங்கப்பெறுகின்றது. சூற்பைகளிலிருந்து முட்டையணு வொன்று குற்பைத் தோலின்மீது ஊர்ந்து வந்து முதிர்ச்சி யடைந்து பக்குவமடையத் தொடங்கும்பொழுது-அஃதா

133. Gros (31-m Gudul-fluid-Endometrium.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/146&oldid=1285148" இலிருந்து மீள்விக்கப்பட்டது