பக்கம்:இல்லற நெறி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 147

சூதக ஒய்வு: கிட்டத்தட்டப் பதின்மூன்று வயதில் தொடங்கும் மாதவிடாய் நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வயதில் நின்று போகின்றது. இதனைச் சூதக ஒய்வு' என்ற பெயரால் வழங்குவர். சிலருக்கு ஐம்பது வயதுக்கு மேலும் ஒழுக்கு ஏற்படும்; சிலருக்கு முப்பத்தைந்து வயதிலேயே நின்றுவிடுவதும் உண்டு மாதவிடாய் தோன்றும் வயதிற்கும் அது நின்றுபோகும் வயதிற்கும் ஒருவித நியதியும் இல்லை; விரைவில் பெரியவளாகும் பெண்ணிடம் நீண்டகாலம் மாத விடாய் ஏற்படலாம்; தாமதமாகப் பூப்பெய்தும் பெண்ணி டம் நாற்பது வயதிற்குள் மாதவிட்ாய் நின்றும் போகலாம்: மாதவிடாய் வட்டம் நிற்றலுடன் குழந்தைபெறும் செய லுக்கும் ஒரு முடிவு ஏற்படுகின்றது. சூதக ஒய்வு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பம் ஆகும்; குற்பைகள் செயல்படுவது குறைவதால்தான் இது நிகழ் கின்றது. மாதவிடாய் நிற்கும்பொழுதும் பெண்களிடம் குறிப்பிடத்தக்க சில அறிகுறிகள் காணப்பெறும். சிலரிடம் மயக்கம், தலைவலி, தூக்கமின்மை, படபடப்பு, வாந்தி முதலியவை நேரிடுகின்றன. சிலருக்கு அடிக்கடி உடல் வியர்க்கும்; சிலருக்கு நெஞ்சில் எரிச்சலும் வயிற்றுப்போக் கும் நேரிடுவதுண்டு; உடல் மாறுதல்களைப் போன்றே உள மாறுதல்களும் ஏற்படுகின்றன. அச்சம், சினம், துன்பம், சகிப்புத்தன்மையில் குறைவு போன்ற உணர்ச்சிகள் இந்தப் பருவத்துப் பெண்களிடம் இயல்பாகவே அதிகரித்துவிடுகின் றன. சிலருக்கு வாழ்க்கையில் உள்ள உற்சாகமே குறைந்து விடுகின்றது; மாதவிடாய் நிற்கும் சமயத்தில் சிலருக்குச் சித்தப் பிரமைக.ட ஏற்படுகின்றது! இத்தகைய கோளாறு களைத் தற்காலத்தில் பல்வேறு ஹார்மோன்களால் குணப் படுத்துகின்றனர்)

சூதக ஒய்வு திடீரென்று ஒரே தடவையில் ஏற்படுவ தில்லை. இங்ானம் ஏற்படுவது மிகவும் அரிது. சூதக ஒய்வு

131; SSS Qūs-Menopause: 132: unus;&ph-Dizziness,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/153&oldid=597911" இலிருந்து மீள்விக்கப்பட்டது