பக்கம்:இல்லற நெறி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 置帮置

இப்பகுதி துணைசெய்கின்றது என்று கிராஃப்: என்ற உடற் கூற்றியலறிஞர் கருதுகின்ருர். இப்பகுதி குட்டை யான, பண்படாத உரோமங்களால் மூடப்பெற்றுள்ளது: உடல் கூற்றியல் அடிப்படையிலும் உடலியல் அடிப்படை யிலும் இந்த உரோமத்திற்கும் இனப்பெருக்க உறுப்பு களுக்கும் நெருங்கிய உறவு உண்டு. ஆண்களிடமும் பெண் களிடமும் காணப்பெறும் இடைநிலைப் பால்றிகுறிகளில் ' இந்த உரோமமும் ஒன்று: இந்த உரோமத் தோற்றம் ஆணுே பெண்ணுே பருவமடையத் தொடங்குவதற்குரிய முதல் அறிகுறிகளுள் ஒன்ருகும். இந்த உரோமம் இரு பாலாரிடமும் அமைந்திருப்பதில் சிறப்பான வேற்றுமை காணப்பெறுகின்றது. ஆணிடம் இது கொப்பூழை: நோக்கிக் குவிகின்றது; இது மேல்நோக்கிய உச்சியைக் கொண்ட முக்கோணம் போன்று அமைந்துள்ளது. பெண் ணிடம் உரோமப் பகுதியின் மேல் விளிம்பு மான்ஸ் வெனரி ஸ்-க்குமேல் ஒரு படுக்கைக் கோடுபோல் அமைந்து கீழ் நோக்கிய உச்சியைக் கொண்ட முக்கோணம்போல் அமைந் துள்ளது: இந்நிலை பாம்பின் படம்போல் இருப்பதால் கவிஞர்கள் அதனைப் பட அரவு அல்குல்' என்று குறிப் பிட்டனர் போலும்!

வெளியுதடுகள்: இவற்றைப் பெரிய உதடுகள்"48 என் றும் வழங்குவர். இவை இரண்டு நீளமான மெத்தைகள் அல்லது மடிப்புகள் போன்று அமைந்து பிற வெளிப்புறப் பிறப்புறுப்புகளைச் சுற்றி வளைத்துக்கொண்டுள்ளன. இவை யும் உரோமங்களால் மூடப்பெற்று, யோனியின் உள்ளே அமைந்திருக்கும் மிக துட்பமான பகுதிகளைப் பாதுகாக்க உதவுகின்றன. இளம் பெண்களிடம்-பிள்ளைப்பேறு ஏற் படாத மிகச் சிறிய உள் உதடுகளைக் கொண்ட பெண்

145. &prime}ti-Graaf 146. இடைநிலைப் பாலறிகுறிகள்-secondary sex - characteristics 147. Gstrúk, þ–Umbilicus or Navel 1482 Quiћи 2-393. dr-Labia majora

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/157&oldid=597915" இலிருந்து மீள்விக்கப்பட்டது