பக்கம்:இல்லற நெறி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இல்லற நெறி


களிடம்-வெளிப்புற உதடுகள் நடுப்பகுதியில் சந்தித்து ஏனைய அமைப்புகளையெல்லாம் மறைத்துக் கொண்டிருக் கும். இந்த உதடுகளிரண்டிையும் விலக்கிப் பிடித்துக் கொண்டாலன்றி உள் அமைப்புகள் கண்ணுக்குப்புலனகா. பெண் கருவுற்ற நிலையிலும், கருவுயிர்க்கும்பொழுதும், வய தான பெண்களிடமும் வெளியுதடுகளின் மட்ட அமைப்பில் மாற்றங்கள் நிகழ்கின்றன. இவற்ருல் வெளியுதடுகள் படிப் படியாக விலகி நின்று யோனியின் ஏனைய பகுதிகளை வெளி யில் தெரியச் செய்கின்றன.

உள் உதடுகள்: இவற்றைச் சிறிய உதடுகள்"4? என்றும் வழங்குவர். பெரிய உதடுகளை விலக்கிப்பிடித்தால் இவை கண்ணுக்குப் புலகுைம். இவை பெரிய உதடுகளுக்கு இணை யாக உள்ளன; இவை யோனியின் மேற்கோடியில் தொடங்கித் தலைகீழாகவுள்ள W என்ற ஆங்கில எழுத்துப் போல் விரிந்து காணப்பெறும். அளவு, வடிவம், அமைப்பு, இருப்பு நிலை, இழை நயம் ஆகிய கூறுகளில் உள் உதடுகள் மிகப் பரந்த வேற்றுமைகளைக் காட்டுகின்றன. அவை கண்ணுக்குச் சரியாகப் புலனுகாத் இரண்டு மிகச் சிறிய முகடு களிலிருந்து உள்ளே புதைந்திருக்கும் எல்லாப் பகுதிகளையும் மறைக்கும் அளவுக்கு வளர்ந்த நிலை யில் துருத்திக் கொண்டிருக்கும் இரண்டு இழைய மடிகள் 58 வரையிலும் வேறுபடுகின்றன: இவற்றை அகட்டிப் பிடித்துக் கொண்டால்தான் யோனிவாயிலையும் 58 பிற

அமைப்புகளையும் காண முடியும். கால் அங்குலம் கூட இல்லாத அகலமுடைய உதடுகளையும் இரண்டரை அங்குல அகலமுள்ள உதடுகளையும் கண்டதாக

அநுபவம் மிக்க மருத்துவர் கூறுகின்றனர். இந்த

149. ®Ju 2. $G$â-Labia minora 150; gosop outh—Texture 15 1. (p&G)—Ridge 152: @aopuu Lolą.scr–Flaps of tissus 153; Gusrawflamułó–Waginal orifice

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/158&oldid=1285154" இலிருந்து மீள்விக்கப்பட்டது