பக்கம்:இல்லற நெறி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இல்லற நெறி


மான மாறுபாட்டினைக் கொண்டது: சிலரிடம் இவ்வுறுப்பு மிகச் சிறியதாக அமைந்து உள் உதடுகள் அதனை ஒரு முக் காடுபோல் முற்றிலும் மூடிக்கொண்டுள்ளன; ஆதலால் இத்தகைய அமைப்புடைய பெண் தன்னுடைய யோனிலிங் கத்தைக் காணமுடியாது. எனினும் பெரும்பாலான பெண் களிடம் இந்த உறுப்பு நன்முக வளர்ந்து எளிதில் கண்டறி யக் கூடியவாறு அமைந்துள்ளது. ஒரு பெண்ணின் யோனி லிங்கத்தின் அளவு அவளுடைய உடலின் அளவுடனே அன்றி அவளுடைய புணர்ச்சித் துடிப்பின் உரனுடனே யாதொரு உறவும் கொண்டில்லை என்பது ஈண்டு அறியத்தக்கது.

யோனிலிங்கம்தான் ஒரு பெண்ணின் கலவியுணர்ச்சி களின் முக்கியமான வெளிப்புறத்தில் காணப்பெறும் இட மாகும். இஃது உடல், காதலுணர்வு கொண்ட உளத் தூண் டல்'களுக்கு மிக எளிதில் துலங்கக் கூடியது. அது பெண்குறியில் யோனித்துவாரத்திற்கு அருகில் அமைந்திருப் பதால் கலவிவிளையாட்டின்பொழுதும் கலவியற்றிய உறவின் பொழுதும் ஒட்டி அமுங்கக்கூடியதாக உள்ளது. பெரும் பாலான பெண்களிடம் யோனி லிங்கத்தை நேர் முறையில் தூண்டித்தான் கலவித் துலங்களை எழுப்புதல் கூடும். புணர்ச் சித் துடிப்பின்பொழுது யோனி லிங்கம் உறுதியானதும் விறைப்பானதுமான நிலையினை எய்துகின்றது. ஆனால், அதன் சிறிய அளவின் காரணமாக இந்த விறைப்பு தெளிவாக இல்லை; உணரக்கூடியதாகவும் இல்லை. கலவியின் பத்திற்கே முக்கியமாகவுள்ள இதன் முக்கியத்துவத்தைப்பற்றிப் பின் ைெரு சமயத்தில் விளக்குவேன்.

கன்னிச் சவ்வு: இந்த அமைப்பு யோனிக் குழலின் நுழை வாயிலில் உள்ளது. படத்தை உற்று நோக்கினல் இவ்வாயில் உள் உதடுகளின் அடிவிளிம்புகளுக்கிடையே இருப்பது தெரிய வரும், கன்னிப் பெண்ணிடம் இந்த வாயில் அரை

155, £Tsirl-ā)—Stimulus. 156. Slaviš Edi-Rosp - nse,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/160&oldid=1285155" இலிருந்து மீள்விக்கப்பட்டது