பக்கம்:இல்லற நெறி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இல்லற நெறி


நிலையிலுள்ள, அல்லது வன்மையற்ற ஆண்கள் ஒர் இளம் பெண்ணைக் கருவுறச் செய்யாதிருக்க ஒருவிதத் தடையாக இஃது அமைந்துள்ளது என்றும், ஒரு பெண் தன் துணை வனத் தேர்ந்தெடுக்கும் செயலில் உடற்கூற்றியலின் அடிப் படையில் அமைந்த ஆற்றலை வியக்கும் அடையாளமாக அமைந்துள்ளது என்றும் ஹேவ்லக் எல்லிஸ் என்ற உளவிய லறிஞர் கருதுகின்ருர்; அப்படியிருப்பனும் நவீன நாகரிக மானிட வாழ்க்கையில் வலுவந்தமாக ஒரு பெண்ணைக் கரு வுறச் செய்யும் சந்தர்ப்பமே இல்லாததால், கன்னிச் சவ்வு அத்தகைய உயிரியல் அடிப்படைச் செயலையே இழந்துவிட் டது என்றே கொள்ளவேண்டும்:

உடற்பயிற்சியினலோ அல்லது தவருகக் கையாளுவத ேைலா கன்னிச்சவ்விர் குத் தீங்கு நேரிடும் என்று சிலர் நினைப்பது தவறு. சாதாரணமாக மேற்கொள்ளும் உடற் பயிற்சிகளிலுைம், சாதாரணமாகப் பிறப்புறுப்புகளைத் தூய்மை செய்வதனுலும் கிழிந்துபோகும் அளவிற்கு அஃது அவ்வளவு மெல்லியதாக இல்லை. அது கிழிய வேண்டுமாயின் அதிக ஆற்றலும் அமுக்சமும் வேண்டியிருக்கும். எனினும், யோனிக்குழலின் திறப்பினைத் தொடர்ந்து திறமையாகக் கையாண்டுப் படிப்படியாக இழுக்கலாம்; அல்லது விரியும்படி செய்யலாம். எடுத்துக்காட்டாக, மாதவிடாய் ஒழுக்கின் பாதுகாப்பி காக உட்புறமாக அணிந்துகொள்ளும் துணி மூடியைப் பயன்படுத்துவதால் கன்னிச்சவ்வு கிழியாமலேயே விரிகின்றது: எனவே, கவனமான பரிசோதனையால் ஒரு பெண் கன்னியா அல்லது அழிந்தவளா’ என்று அறுதியிடு தல் இயலும். எனினும், கன்னிச்சவ்வின் திறப்பு பல்வேறு வேறுபாடுகளுடன் இருப்பதால் பெரிய அல்லது விரிந்த திறப்பு இயல்பானதா அன்றி கலவியினல் அல்லது பிற செய லால் நிகழ்ந்ததா என்று சொல்லுவது கடினம். திருமணம் நிகழ்ந்து பல மாதங்கள் கழிந்தும் சில பெண்களிடம் "கன்னிச்சவ்வு காணப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்ற

i 60. Gepsi své sráðsfleið–Havelock Ellis:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/162&oldid=1285156" இலிருந்து மீள்விக்கப்பட்டது