பக்கம்:இல்லற நெறி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் I63

யற் கூறுகளே அதிமுக்கியமாக அமைகின்றன; எனவே, பூப்பெய்திய பின்னர் இரண்டு சூற்பைகளை நீக்கிலுைம் ஒரு பெண் சாதராணமாகப் புணர்ச்சி நாட்டமுள்ளவளாகவே இருப்பாள்; அவளிடம் தாம்பத்திய உறவுகளும் திருப்தியான முறையிலேயே இருக்கும்.

மேற்குறிப்பிட்ட அறுவை கிகிச்சை, சோதனைகளுக் காகப் பிராணிகளிடம் பன்முறை மேற்கொள்ளப்பெற்றது: காமக் கூறுகளின் வளர்ச்சியில் சூற்பைகளின் உறவினைத் திட்டமாக நிறுவுவதற்கு இச்சோதனைகள் துணை செய்தன: ஒர் இளம் பெண் பிராணியிடம் குற்பைகளை நீக்கிப் பின்னர் அதனிடம் வேருெரு குற்பையை நாட்டினல், அப்பிராணி சாதராணமாகப் பால் வளர்ச்சியினையும் அடைகின்ற து: ஒரு சில ஆண் பிராணிகளிடமிருந்து விரைகளே நீக்கி அவற் றிற்குப் பதிலாகச் சூற்பைகளே நட்டு அவற்றிடம் பெண் தன்மை வளரச் செய்தலும் சாத்தியப்படுகின்றது; இவ் வாறு பெண் தன்மை வளரச் செய்த ஒரு பன்றி அல்லது எலி பெண்ணைப்போன்ற தோற்றத்தைக் காட்டி பால் ந - ந் தையையும் எதிர்வினை புரிதலையும் மேற்கொள்ளுகின்றது: இத்தகைய பிராணியிடம் குறிப்பிடத்தக்க அளவு முலைக் காம்புகள் பெருத்து, பால் சுரந்து, அதன் குட்டிகளுக்கும் பாலூட்டியது மிகவும் கவனத்திற்குரிய விளைவாகும். இப் பிராணி பெண் பிராணியைப் போலவே எதிர்வினை புரிஇன் றது; கூண்டினுள் வைக்கப்பெறும் குட்டிப் பிராணிகளிடம் திட்டமான தாய்மை பூக்கத்தைக் காட்டுகின்றது. அண் மையில் அடித்தலைச் சுரப்பி, குற்பை ஆகியவற்றின் சாறு களைச் சில ஆண்பிராணிகளிடம் குத்திப் புகுத்தி இதேமாதிரி யான விளைவு சளைக் கண்டுள்ளனர். பெரும்பாலும் சில வேதியியல் தூண்டல்களின் விளைவினுல்தான் தாய்மையூக்க மும் நடத்தையும் காண்ப்பெறுவனபோல் தோன்றுகின்றது.

ஈஸ்டிரின், புரொஜெஸ்டிரின்: புதிதாகப் பிறந்த ஆண் பெண் குழவிகளின் கொங்கைகளில் சில சமயம் பால் காணப் பெறுவது இயல்பிகந்த முறையில் பால் சுரக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/169&oldid=597928" இலிருந்து மீள்விக்கப்பட்டது