பக்கம்:இல்லற நெறி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இல்லற நெறி


முட்டை பக்குவமடைதல் நிகழ்ந்த பிறகு ஃபாலிக்கிளை நிறைக்கு மஞ்சட் பொருளின் அணுக்களினின்றும் இது உண்டாகின்றது: இந்த ஹார்மோன்களின் பங்கினைப்பற்றி அறிய இன்று விரிவாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பெற றுள்ளன: இன்று அவை ஒருவரிடம் ஹார்மோன்களின் குறையைத் திருத்தவும் பாலுறவுபற்றிய செயலையும் இனப் பெருக்கச் செயலையும் தூண்டவும் பயன்படுத்தப்பெறு கின்றன. எனினும், அவற்றின் பயனும் எல்லையும் திட்ட மாக நிறுவப்பெறவேண்டுமாயின் இன்னும் அதிகமான ஆராய்ச்சிகள் தேவை.

செயற்கை முறையில் ஹார்மோன்கள்: அண்மைக் காலத் தில் பெண்ணின் பாலறி ஹார்மோன்களைப் போன்ற பண்பு களேடைய பொருள்கள் சேர்க்கை முறையில் உண்டாக் கப்பெற்றுள்ளன: அவற்றின் விளைவுகளும் இயற்கையில் கிடைக்கும் எஸ்ட்ரோஜெனின் விளைவுகளைப் போன்றே காணப்பெறுகின்றன. எனவே, அவை அதிக விலையுள்ள எஸ்ட்ரோஜென்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப் பெறு கின்றன. ஏற்கெனவே சூற்பைகள் நீக்கப்பெற்ற பிராணி களிடம் இவற்றைக் குத்திப் புகுத்தினுல், பாலறிகுறிகளின் வளர்ச்சியையும் பால் நடத்தையையும் பொறுத்தவரையில் அவை குற்பைகளின் செயலைத் திரும்ப அமைக்கின்றன: அவை கருப்பை, கருக்குழல்கள், யோனிக்குழல், கொங்கை கள் ஆகியவற்றை வளரச் செய்து சாதாரனமான கலவிச் செயலையும் தோற்றுவிக்கின்றது சூற்பைகள் படிப்படியாக ஒய்ந்து சூதக ஒய்வு தொடங்கும்பொழுது பெண்களிடம் ந்த ஹார்மோன்கள் அடிக்கடிப் பயன்படுத்தப்பெறு கின்றன. இது சூதக ஒய்விற்குரிய அறிகுறிகளுள் பலவற் றைப் போக்கி பெண்ணிடம் நன்னிலையை விளைவிக்கின்றது.

இனி, அடுத்து வரும் கடிதங்களில் இனப் பெருக்கத்தைப் எழுதுவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

177. மஞ்சட் பொருள்-Yellow body: 178. சேர்க்கை

Qpopujá, --Synthetically:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/172&oldid=1285161" இலிருந்து மீள்விக்கப்பட்டது