பக்கம்:இல்லற நெறி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இல்லற நெறி


15

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு.

நலன். நலன்பெறுக.

பால் வேற்றுமையில்லா இனப்பெருக்கம் : இனப் பெருக்கம் இறைவன் படைப்பில் எல்லா உயிர்களிடமும் நிகழ்ந்து வரும் ஒர் அற்புத நிகழ்ச்சி. பாக்டீரியா போன்ற முதிரா நிலைக்குரிய ஒற்றையணு உயிர்களிடம் பாலில் வேற்றுமையே இல்லை; அவ்வுயிரிகளிடம் ஆண் என்றும் பெண் என்றும் பாகுபாடு இல்லை. எனவே, அவற்றிடம் இனப்பெருக்கச் செயலும் எளிதாக அமைகின்றது. எடுத்துக் காட்டாக ஒரணு உயிரி ஒரளவு வளர்ச்சியுற்றதும். அஃது இரண்டாகப் பிரிகின்றது; அந்த இரண்டும் தாம் மீண்டும் இரண்டாகப் பிரியும் வரையிலும் வளர்ந்து முதிர்ச்சி யடைந்து கொண்டே போகின்றன. ஹைட்ரா 3 என்ற புது நீர்ப் பிராணி சிறு சிறு மொட்டுக்களை விடுகின்றது. அவை தாயணுவிடமிருந்து பிரிந்து முதிர்ந்த உயரிகளாக வளர்கின் றன. ஒரு தட்டைப் புழுவும் பல பகுதிகளாகப் பிரிந்து ஒவ் வொரு பகுதியும் ஒவ்வொரு தனி உயிரியாக வளர்கின்றது. இம்முறையில் பெருக்கமடைவதில் எந்த விதமான பாலறிப் பொறிநுட்பமும் பங்கு பெறுவதில்லை. இவை பால்வேற் றுமையில்லா முறைகளில் இனப்பெருக்கமடைவதாகப் பேசப் பெறுகின்றன:

(ip@prir įståHUà gifluu–Primitive spirsipi a wif—Amoeba sogamul. Tir-Hydra மொட்டு-Bud glo-Gol-lo 14(up—Flatworm பால் வேற்றுமையில்லா-Asexual

.

6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/174&oldid=1285162" இலிருந்து மீள்விக்கப்பட்டது