பக்கம்:இல்லற நெறி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் #71

தாம் நூற்ருண்டின் இறுதியில்தான் இவ்விரண்டு வகை அணுக்களும் இனப்பெருக்கத்தில் பெறும்பங்கு பெற்றதாக அறியப்பெற்றது. இன்னும் இதன் முழு வரலாறு நன்கு அறியப்பெறவில்லை என்பதை நீ தெரிந்துகொள்ளவேண்டும். பாலறி இனப்பெருக்கம் பெற்றேர்களின் உடல்களி னுள்ளோ அல்லது வெளிப்புறத்திலோ நடைபெறலாம்: பெரும்பாலான நீர்வாழ் பிராணிகளுள் ஆண்களும் பெண் களும் தம்மைச் சுற்றியுள்ள நீரில் முறையே விந்தனுக்களை யும் முட்டையணுக்களையும் வெளிப்படுத்துகின்றன; இங்கு அவை சந்தித்து ஒன்றுசேர்கின்றன. பல்வேறு அரிய பிராணி களில் இந்த இரண்டு உயிரணுக்களும் அடைகாக்கும் பை' என வழங்கப்பெறும் ஒரு பிரத்தியேகமான பையில் சந்திக் கின்றன. இப் பை அப் பிராணியின் உடலின் வெளிப்புறத் தில் அமைந்துள்ளது. கடற் குதிரையிடத்தில் ஆணி டமே இப் பை அமைந்துள்ளது; முட்டைகள் குஞ்சு பொரிக்கும் காலம்வரை ஆணே அவற்றைச் சுமந்து செல்லு கின்றது. தந்தை அடை காப்பதற்கு இன்னுெரு எடுத்துக் காட்டு ஒருவகைத் தேரை ஆகும். இது தலைப்பிரட்டை கள் தோன்றும் வரையில் கருவுற்ற முட்டைகளைத் தன்னு டைய கால்களைச் சுற்றிலும் கட்டப்பெற்ற நிலையில் சுமந்து செல்லும். ஆனல், இவை பிராணியின் இனப்பெருக்கத்தில் மிக அரிய புறனடைவகைகளாகும்."

விந்து பாய்ச்சுகல் : நடைமுறையில் எல்லா உயிரின உயிர்வாழ் பிராணிகளிடமும் விந்தனுக்களும் முட்டை யணுக்களும் பெண்ணின் உடலினுள்ளேயே சந்திக்கின்றன . இதற்கு இரண்டு பிராணிகளின் உடல்களும் இணைதல் மிகவும் இன்றியமையாதது இந்த இணைவிழைச்சின்பொழுது ஆண் தன்னுடைய விந்துப் பாய்மத்தைப் பெண்ணின் பிறப்புறுப்

12. அடைகாக்கும் பை-Broஒd pouch 18; Goog—Toad (“Obstetrical toad') 14: 3, avià prlao -—Tadpole 15: „ojfñuj LI;bawemu-su6ms-Rare exceptional type

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/177&oldid=597938" இலிருந்து மீள்விக்கப்பட்டது