பக்கம்:இல்லற நெறி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இல்லற நெறி


யோனிக் குழலினுள் பாய்ச்சப்பெறும் விந்தனுக்கள் எல்லாப் பக்கங்களிலும் நகர்ந்து செல்லுகின்றன. ஆனல், ஒர் உயிரியல்-வேதியியற் காரணத்தின்படி அவை கருப் பையை நோக்கியே நகர்கின்றன. யோனிக்குழலில் சுரக்கும் நீர்கள் அமிலத் தன்மையுடையவை; இவை விந்தனுக்களைப் பாதிக்கக் கூடியவை. கருப்பையின் வாயினின்று வரும் நீர்கள் காரத்தன்மையுடையவை; இத் தன்மையுடைய நீர்கள் விந்தனுக்கள் வளர்வதற்கு ஏற்றவை. எனவே, விந் தணுக்கள் யோனிக் குழலின் சூழ்நிலையை வெறுத்துக் கருப் பையை நோக்கியே நகர்கின்றன. இணைவிழைச்சின்பொழுது கருப்பையின் சுரப்பு நீர்கள் அளவில் அதிகரித்து யோனிக் குழவினுள் ஒழுகும்பொழுது அவை விந்தனுக்கள் கருப் பையை நோக்கிச்செல்வதற்கு ஏற்ற வழியையும் அமைக்கின் றன. இந்த நீர்கள் விந்தனுக்களுக்கு சாதகமான ஊட்டப் பொருள்களையும் பெற்றுள்ளன என்றும் சொல்லப்பெறு கின்றது.

யோனிக் குழலினுள் பாய்ச்சப்பெறும் விந்து முழுதும் கருப்பையினுள் நுழைவதில்லை; ஒரு சிறு பகுதியே உள்ளே நுழைகின்றது. ஏனையப் பகுதி வெளியே வழிந்துவிடுகின் றது. யோனிக்குழலில் பல மணி நேரம் விந்துப் பாய்மம் ஒட்டிக் கிடக்கின்றது. இதிலுள்ள விந்தணுக்கள் நாலிலி ருந்து ஆறுமணிக்குள் மரித்துவிடுகின்றன. பாய்மத்தின் ஒரு பகுதி யோனிக்குழலின் சுவர்களால் உறிஞ்சப்பெறுகின்றது என்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால் இஃது இன்னும் சரி யாக ஆராயப்பெறவில்லை; இதில் இன்னும் அதிகமான கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது. யோனிக் குழல் விந்துப் பாய்மத்தை உறிஞ்சுவது ஒரு பெண்ணின் உடல் நிலைக்கு ஏற்றது என்றும், பெரும்பான்மையான பெண்கள் திருமணத்திற்குப் பிறகு எடையில் மிகுவதற்கு இதுவே கார ணம் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆண்களிடமும்திருமணத் திற்குப் பிறகு இத்தகைய மாறுதலைக் காணலாம். இன்றும் சிலர் மாமனர் வீட்டு விருந்தே மாப்பிள்ளையை இந்நிலைக்குக் கொணர்ந்துள்ளது என்று கூறுவதைக் கேட்கலாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/180&oldid=1285165" இலிருந்து மீள்விக்கப்பட்டது