பக்கம்:இல்லற நெறி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் ፲??

கூறுவேன்; கருப்பையின் நீளம் சுமார் மூன்று அங்குலம் என் றும், குழவின் நீளம் சுமார் ஐந்து அங்குலம் என்றும் நீ நன்கு அறிவாய். வித்தணுக்களை நுண்பெருக்கியின் முலம் பார்க்குங்கால் அவை எவ்வளவு வேகமாக நகர்கின்றனவோ அவ்வளவு வேகமாகவே உடலினுள்ளும் நகர்ந்தால், அவை ஏழு அல்லது எட்டு நிமிடங்களுக்கு ஒர் அங்குலம் வீதம் நகர்ந்து சென்று குழலின் இறுதியை அடைவதற்குக் கிட் டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகலாம். விந்தணுக்கள் நேராக நகர்ந்து சென்று வழியில் யாதொரு தடையும் இல்லாவிட் டால்தான் இந்த நேரத்திற்குள் செல்லலாம். இஃது ஒரு கொள்கைமுறை அளவேயன்றி, உண்மையளவு அன்று: மனிதர்களிடம் இதுகாறும் இந்த அளவினை யாரும் அளந்து காணவில்.ை அண்மைக் காலத்தில் பிராணிகளிடமிருந்து விந்தணுக்கள் கருப்பையின் மூலம் குழல்களேயடைவது அவ் வணுக்களின் அசையும் தன்மையை மட்டிலும் பொருத்த தன்று என்றும், அஃது இவ்வுறுப்புகளிலுள்ள தசைகளின் செயல்களைப் பொறுத்ததென்றும், ஆகவே அவை குழலை அடைந்து கருவுறுதல் இன்னும் குறைந்த காலத்திலேயே நடைபெறக்கூடும் என்றும் தெரிய வருகின்றது.

இன்னுெரு செய்தியும் ஈண்டு நீ அறிதல் வேண்டும். கருவுறுதல் குழலில்மட்டிலும்தான் நடைபெறும் முட்டை யணுவின் வாழ்நாள் நாற்பத்தெட்டு மணி வரைதான் நீடித் திருக்கும் என்றும், அது குழல் வழியாகக் கருப்பையை அடைவதற்குள் தன் ஊட்டத்தையும் ஆற்றலையும் இழந்து விடுகின்றது என்றும், ஆகவே அஃது எவ்வாருனும் கருப்பை யில் கருவுறுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அண்மைக் கால ஆராய்ச்சி முடிவுகளால் அறிகிருேம். இவ்வாறு கருவுறு தல் நிகழ்ந்த சில நாட்களில் பெண் கருப்பமுற்றிருப்ப தாகக் கருகப்பெறுகின்ருள். கருப்பக்காலச் சின்னங்களையும் பிறசெய்திகளையும் அடுத்த கடிதத்தில் தெரிவிப்பேன்:

அன்புள்ள,

திருவேங்கடத்தான். 数ーIä

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/183&oldid=597945" இலிருந்து மீள்விக்கப்பட்டது