பக்கம்:இல்லற நெறி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 181

உணவுக்குழல், நுரையீரல் 29 முதலியவை உண்டாகின்றன: இந்தச்செயல்கள் யாவும் மிகவும் சிக்கலானவை; கருவளர்ச்சி யியல்நிபுணர்கள் கூட அவற்றை முழுவதும் புரிந்துகொண் டதாக ஒப்புக் கொள்வதில்லை. இரண்டாம் திங்கள் இறுதி யில் ஆதி நரம்பு மண்டலம், அரைகுறையான கண்கள், காதுகள், வளரப்போகும் எலும்புகள், தசைகள், கைகால் கள் ஆகியவை அமைகின்றன. நான்காவது வார இறுதியில் இது கால் அங்குலம் நீளம் உள்ளது. இரண்டாவது திங்கள் இடையிலும் மானிட இளஞ்சூல் ஏனைய பாலுண்ணிகளின் ! கருவைப் போலவே உள்ளது. அதனிடம் செவுள்கள்: 2 காணப் பெறுகின்றன. அது பாய்மம் நிரம்பி பையில் வாழ் கின்றது; இதுதான் பனிக்குடம் என்பது. இப்பொழுது அதற்கு ஒரு வாலும் உண்டு. அஃது இரன்டாவது திங்கள் இறுதிக்குப் பிறகுதான் மறைகின்றது, எட்டாவது வார இறுதியில் அது முக்கால் அங்குல நீளம் உள்ளது; இப் பொழுதுதான் உருவ அடையாளங்கள் காணத் தொடங்கு கின்றன; இதன் பிறகு குழந்தை பிறக்கும் வரையில் உள் வளது முதுசூல்நிலை ஆகும்; உடலைவிடப் பெரிதான தலை, முக அடையாளங்கள், கைகால்கள் முதலியவற்றை இப் பொழுது தெளிவாகக் காணலாம். பதிருைவது வாரத்தில் சிசு சுமார் ஆறரை அங்குல நீளமும் இரண்டு அவுன்சு எடை யும் பெறுகின்றது; இப்பொழுது அது திட்டிமான மனித வடிவத்தை அடைகின்றது; விரல்களும் பெரு விரல்களும் தனியாகப் பிரிந்து மிருதுவான நகங்களைப் பெறுகின்றன. இப்பொழுது புறப்பிறப்புறுப்புகளும் புலனுகின்றன. இத் நிலையில் குழந்தையின் பால் இன்னதெனக் கூறிவிடவாம். இவ்வாறு தொடர்ந்து நாற்பதாவது வாரம் வரைவில் (10 மாதம் வரையில்) வளர்ச்சி நடைபெறுகின்றது. பிறக்கும் நிலையில் குழந்தை 20 அங்குல நீளமும் கிட்டத்தட்டி ஏழு 29. Gigotrușoréð - Lungs. 30. கருவளர்ச்சியியல் filjørr; &#6ir-Embryologists.

3 1 : Lurr spisstrasil-Mammal: 32: Gerejérséữ- Gills. 33: gp3,épìà-Foetal stage.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/187&oldid=597949" இலிருந்து மீள்விக்கப்பட்டது