பக்கம்:இல்லற நெறி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப்பெருக்கம் ፲88

குழந்தை துழாவிக்கொண்டு வளர்ந்து வருகின்றது. இந்தப் பனிக்குடத்தில் உண்டாகும் நீரும் படிப்படியாக அதிகரித் துக் கொண்டே போகும். இந்த நீர் குழந்தையின் பாதுகாப் பாக அமைந்திருப்பதுடன், குழந்தைக்கும் யாதொரு அதிர்ச்சியும் ஏற்படா வண்ணமும் காக்கின்றது.

நஞ்சுக் கொடி: தாயின் கருப்பையில் இருக்கும் பொழுது குழந்தை எப்படி உணவு முதலியவற்றைப் பெறு கின்றது என்று நீ வினவலாம். அதுதான் ஆண்டவன் படைப்பின் வியப்பாகும்:

கருப்பைக்குள் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும்; விருப்புற் றமுதளிக்கும் மெய்யன்:

என்ற தனிப்பாட்டடிகளை நினைவு கூர்க. முட்டை முதன் முதலாக கருப்பையில் ஒட்டிக் கொண்ட இடத்தில் நஞ்சுக் கொடி 85 என்ற பகுதி வளர்வதாக மேலே குறிப்பிட்டேன் அல்லவா? இப்பகுதியே தாயையும் சேயையும் இணைக்கும் பகுதியாகும்: இங்குத்தான் தாயின் குருதியும் சேயின் குருதி யும் ஒன்ருேடொன்று இரண்டறக் கலக்காமல் கித்தாந்த தத்துவம்போல் மிக நெருங்கியுள்ளன: நஞ்சுக் கொடி தாயின் குருதியோட்டத்தையும் சேயின் குருதியோட்டத் தையும் பிரிக்கின்றது. ஆனால், ஒரு பக்கமிருந்து மற்ருெரு பக்கம் சில பொருள்கள் இந்தச் சுவரை ஊடுருவிச் செல்லக் கூடும்; ஊட்டமும் கழிவுப் பொருள்களின் நீக்கமும் பரி மாறிக் கொள்ளப் பெறுகின்றன. குழந்தை தாயினிட மிருந்து ஊட்டப் பொருள்களைப் பெறுகின்றது; கழிவுப் பொருள்களைத் தாயினிடம் அகற்றிவிடுகின்றது: ஒன்பது மாதக் கருப்பை வாழ்க்கையிலும் சேய் தாயின் குருதியி லிருந்தே உயிரியம்: , உணவுப் பொருள் ஆகியவற்றைப் பெற்று எல்லாக் கழிவுப் பொருள்களையும் அக்குருதி வம். டத்திலேயே கழித்து விடுகின்றது. ஒரு குழந்தை பிறப்

34. Llanfi & Lih-Bag of waters 35. Béjà Qārq-Placenta. 36; 2-užňuth-Qxygen,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/189&oldid=597953" இலிருந்து மீள்விக்கப்பட்டது