பக்கம்:இல்லற நெறி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் I 85

யும். இதில் குருதிக் குழல்கள் உள்ளன. இக்குழல்களின் வழியாகவே குழந்தையின் குருதியோட்டம் நஞ்சுக்கொடிக்கு வருகின்றது. தாய் கருவுயிர்த்ததும், நஞ்சுக்கொடியை நறுக்கித் தாயின் இணைப்பிலிருந்து புனிற்றிளங் குழவியைப் பிரிப்பர். இவ்வாறு தாயுடன் இணைக்கப்பெற்றிருக்கும் பகுதியே பின்னர்க் குழந்தையின் கொப்பூழாகின்றது.

கருப்பையின் மாற்றம் : கருப்பையின் தன்மையைப் பற்றி முன்னர் எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டிருக் கின்றேன். கருப்ப காலத்தில் இதன் அதிக அளவிற்குக் காரணம், அதிலுள்ள தசை இழையங்களின் வளர்ச்சியே யாகும். இக்காலத்தின் இறுதியில் சுவர்கள் நீண்டு மெல்லி

يوه

படம்-27 : கருப்ப காலத்தில் கருப்பையின் வளர்ச்சியைக் காட்டுதல். ஆருவது மாதத்தில் (24வது வாரம்) கருப்பை கொப்பூழ் வரை வளர்ந்திருப்பதைக் காண்க.

தாகவும் மாறுகின்றன. கருப்ப காலத்தின் ஆருவது மாதத் தில் தாயின் கொப்பூழ்வரைக் கருப்பை வளர்கின்றது; ஒன்பது மாதத்தில் அஃது அடிவயிற்றின் முகடு வரை வளர்கின்றது. ஒவ்வொரு மாதத்திலும் கருப்பை முன்

39. gjig. Guust pl-Abdomen

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/191&oldid=597958" இலிருந்து மீள்விக்கப்பட்டது