பக்கம்:இல்லற நெறி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இல்லற நெறி


னேறிக்கொண்டு போவதைப் படம் (படம்-27) விளக்கு கின்றது. உற்று நோக்கி அறிக சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு திரவம் கொள்ளக் கூடிய கருப்பை எட்டு முதல் பத்து பிண்ட் வரை திரவம் கொள்ளக் கூடிய அளவுக்கு அது வளர்ந்து விடுகின்றது. எடையிலும் ஒரவுன்சிலிருந்து இரண்டு இராத்தல் வரை வளர்கின்றது. எனினும், கருவுயிர்த்த பிறகு கருப்பை விரைவாகச் சுருங்கி, அளவில் குறைகின்றது; சில வாரங் களில் அது தன் பழைய நிலையையே அடைந்து விடுகின்றது. ஐந்து அல்லதுஆறு வாரங்களில் கருப்பகால நிலையிலிருந்ததி லிருந்து அது 1 120 பங்குக்குக் குறைந்து விடுகின்றது:

கருப்பகாலச் சின்னங்கள் : ஒரு பெண் தாய்மை அடைந்து விட்டாளா இல்லையா என்பது எவ்வாறு அறுதி யிடப்பெறுகின்றது என்பதையும் நீ அறிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் நின்று விடுதல் கருப்பத்தின் முக்கியமான ஒரு சின்னமாகும்; இதை மட்டிலும் கொண்டு ஒரு பெண் கருப்பிணி என்று சொல்ல முடியாது: குருதிச் சோகை, மார்பில் சளி, மேக நோய், இருமல்நோய் போன்ற வற்ருல் மாதவிடாய் தடைப்படுவதுண்டு. பிறவிக் கோளா ருன இரு பிளவு கொண்ட கருப்பையை உடைய பெண்கள் கருப்பமுற்ற பிறகும் தீட்டாகிக் கொண்டிருப்பர்; கருப் பையின் ஒரு பகுதியில் கரு வளர்ந்து கொண்டிருக்கையில் மற்ருெரு பகுதி மாத விடாயை வழக்கம்போல் வெளிப் படுத்திக்கொண்டிருக்கும். சில பெண்களிடம் மசக்கை 40 தோன்றும்; கருப்பமுற்ற முதல் சில வாரங்களில் ஏற்படும் மயக்கம், தலைசுற்றல், வாந்திபோன்ற அறிகுறிகளை மொத்த மாக "மசக்கை’ என்று வழங்குவர். இந்த அறிகுறிகள் காலையில்தான் அதிகமாக இருக்கும். முதல் இரண்டு மாதங் களில் நஞ்சுக்கொடியில் உற்பத்தியாகும் ஒருவித வேதியியற் பொருள் குருதியில் பரவி, அது மூளையைப் பாதிப்பதால்

40. “unfé605'-'Morning sickness”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/192&oldid=1285171" இலிருந்து மீள்விக்கப்பட்டது