பக்கம்:இல்லற நெறி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 189

தேரைகள் பயன்படுகின்றன. கருப்பிணியின் சிறுநீரில் சில வேதியியற் பொருளைச் சேர்த்து, அத்துடன் அளவோடு உப்புத் திரவத்தைக் கலந்து, அதைக் கருத்தரிக்காத பெண் தவளையின் மீது ஊசி மூலம் குத்திப் புகுத்துகின்றனர். ஊசி குத்திய பன்னிரண்டு மணி நேரத்தில் தவளை ஏராளமாக முட்டையிடத் தொடங்குகின்றது. பெண் கருப்பிணியாக இல்லாவிடில் தவளை முட்டையிடுவதில்லை; பல வாரங்கள் கழித்து இதே தவாேன் மீண்டும் சோதனைக்குப் பயன் படுத்தலாம்.

இன்னொரு முறையும் மேனாட்டு மருத்துவ நிலையங்களில் கையாளப்பெறுகின்றது. அமெரிக்காவில் ஒரு வகை ஆண் தவளையின் மீது ஐயப்படும் பெண்ணின் சிறுநீரை ஏற்றிவிடு கின்றனர். இத்தவளையை ஒரு கண்ணுடிப்பேழைக்குள் வைத்து அதில் தேங்கும் தவளையின் சிறுநீரைப் பரிசோதிக் கின்றனர். அதில் தவளையின் கரு அணுக்கள் காணப்பெற் ருல் பெண் கருப்பிணி என்றும், கானப்பெருவிடில் கருப்பிணி அல்லள் என்றும் அறுதியிடுகின்றனர், மாதவிடாய் தவறிய பத்து அல்லது பதினைந்து நாட்களில் (கருத்தரித்த இரண்டு அல்லது மூன்ருவது வாரத்தில்) இம்முறைகளால் கருப்பம் என்பதை எளிதில் கண்டறிய முடிகின்றது,

போலி கருப்பம்: கருப்பகாலச் சின்னங்களைப்பற்றி விரிவாக அறிந்து கொண்ட நீ போலி கருப்பத்தைப்பற்றி யும் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும். போலி கருப்பம் 41 என்பது குழந்தை வேண்டுமென்று தீவிர அவாவுள்ள பெண் களிடம் காணப்பெறும் ஒருவித மாமாயம். கருப்பத்தின் எல்லா அறிகுறிகளும் ஏற்பட்டுக் கடைசியில் அவ்வளவும் * பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போவதைத் தான் போலி கருப்பம் என்று வழங்குகின்றனர். இது பெரும் பாலும் மாதவிடாய் நிற்கும்-சூதக ஒய்வுக் ஏற்படும்

46. தேரைகள்-Toads. 47. Gurso, soyouth-False pregnancy. 48: Szis püreq-Menopause.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/195&oldid=597966" இலிருந்து மீள்விக்கப்பட்டது