பக்கம்:இல்லற நெறி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இல்லற நெறி


17

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலன் பெறுக:

புதிதாக வாழ்க்கையில் புகுந்த மணமக்கள் கருப்பகாலத் தில் நேரிடக்கூடிய சில அபாயகரமான கோளாறுகளைப்பற்றி யும் ஒரளவு அறிந்தி நத்தல் இன்றியமையாதது. இவைகளைப் பற்றி ஒரளவு தெரிந்திருந்தால் இவை ஏற்பட்டவுடன் சிறி தும் தாமதமின்றி மருத்துவரை நாடி விபத்தினைத் தவிர்த் துக் கொள்ளலாம்: இனி, இக் கோளாறுகளை ஒவ்வொன் ருக விளக்குவேன்.

கருச்சிதைவு கருச்சிதைவு'க்' என்பது சாதாரணமாக சில பெண்களிடம் ஏற்படுகின்றது. கருப்பையினின்றும் குழந்தை ஏழாவது மாதத்திற்குள் வெளியேறுவதுதான் கருச்சிதைவு என்பது. தாயினிடம் மேக நோய் ஏற்பட்டிருந் தாலும், அம்மை, இன்புளுயன்ஸா, நிமோனியா போன்ற நோய்கள் கடுமையான சுரத்துடன் தாக்கினலும், தாயின் உணவில் விட்டமின் E என்னும் சத்து குறைவாக இருந்தா லும் கருச்சிதைவு நிகழ்கின்றது. சில சமயம் குழந்தையின் நஞ்சுக்கொடியில் நோய் ஏற்படினும், அல்லது அதுதானே முறுக்கிக் கொண்டுவிட்டாலும் கருச்சிதைவு உண்டாகின் றது. தந்தையின் உடல் நலம் மேகநோய், வெள்ளை, மது மோகம் ஆகியவற்ருல் சீர்குலைந்து இருந்து அவருடைய விந் தணுவால் கருத்தரிக்கப்பெற்று இருந்தால் அது இதை கின்றது.

கருச்சிதைவிற்கு அறிகுறியாகப் பெண்ணின் அடிவயிற் றில் சிறிது வலி தோன்றுகிறது. சில மணி நேரத்தில்

49; 5(54860&q-Abortions

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/198&oldid=1285174" இலிருந்து மீள்விக்கப்பட்டது