பக்கம்:இல்லற நெறி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

இல்லற நெறி


18

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன், நலனுகுக.

கருவுயிர்த்தல் பற்றிய சில கொள்கைகள்: முழு வளர்ச்சி பெற்ற குழந்தையை இயற்கை கருப்பையினின்றும் வெளியே தள்ளுகின்ற நிகழ்ச்சிதான் கருவுயிர்த்தல்’ என்று வழங்கப் பெறுகின்றது. கருவுற்ற பிறகு குழந்தை பிறப்பதற்குரிய கூறுகள் பன்னெடுங்காலமாக மருத்துவர்கட்கு ஒரு புதிரான பிரச்சினையாகவே இருந்து வருகின்றன. குழந்தை நெருக்க மான இடத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வெளி வருவதற்குத் தானக மேற்கொள்ளும் முயற்சியே பிரசவ வேதனை’ என்பதாகப் பழங்கால மக்கள் நம்பி வந்தனர். குழந்தைப் பிரசவம் சிரமமாக இருக்கும்பொழுது அவர்கள் நல்ல நல்ல உணவு தருவதாக இன்சொல் கூறியோ அல் லது தண்டனை தருவதாக பயமுறுத்தியோ அவர்கள் குழந்தையை அழைப்பது வழக்கம். இன்றுகூடப் பிரசவம் என்பது முதுச்சூலில் ஏற்படும் மாறுதல்களின் காரணமாக நடைபெறுகின்றதா, அன்றி தாயினிடம் ஏற்படும் மாறுதல் களின் காரணமாக நிகழ்கின்றதா என்பது தெளிவாக அறி யக்கூடவில்லை. இதை விளக்குவதுபற்றிப் பல கொள்கை கள்' கூறப்பெற்றுள்ளன. ஆனல் ஒன்றுகூட முற்றிலும் சரி யாக விளக்கவில்லை, பத்தாவது மாதம் நெங்கியதும் கருப் பையின் தசைகளுக்குத் தானுகஏற்படும் ஒருவிதமான தொந் தரவில்ை கருப்பை சுருங்கி விரிகின்றது என்றும், அதனல் தான் பிரசவம் நிகழ்கின்றது என்றும் கூறுவர் ஒரு சாரார்.

56. Lyoffstra, lo&#dir—Primitive people 56. Qarshans—Theory

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/206&oldid=1285178" இலிருந்து மீள்விக்கப்பட்டது