பக்கம்:இல்லற நெறி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 201

வளரும் சிசு ஒரு நச்சுப் பொருளை உற்பத்தி செய்கின்றது என்றும், இது தாயின் குருதியில் ஏறிக்கொண்டே சென்று பத்தாவது மாதத்தில் உடலில் ஒருவித அதிர்ச்சியை விளை விக்கின்றது என்றும், இந்த அதிர்ச்சியினல் பிரசவம் நடை பெறுகின்றது என்றும் மற்ருெரு சாரார் கூறுவர். ஆளுல் அடித்தலைச் சுரப்பியில் ஊறும் சாறுகள்-ஹார்மோன்கள்பிரசவத்தைத் தொடக்குகின்றது என்று இன்றைய மருத்து வர்கள் கருதுகின்றனர். கருப்பகால இறுதியில் இந்த ஹார் மோன்கள் அனுப்பும் சில தூண்டல்கள் கருப்பையின் தசை களைச் சுருங்கச் செய்கின்றன என்றும், இந்தச் சுருக்கமே பிரசவ வேதனையாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்: முதலில் கருப்பை சுருங்குதல் சிறிது நேரம் மெதுவாக (feeble) நிகழ்கின்றது; அஃதாவது அரைமணிக்கொருமுறை சுருங்குகின்றது; ஆனால், படிப்படியாக இவ்வேதனை அளவில் அதிரிக்ககின்றது; அடுத்தடுத்துச் சுருங்கும் காலஇடையீடும் குறுகுகின்றது: அனிச்சை முறையில் இயங்கு தசைகளால் நிகழும் கருப்பையின்சுருக்கங்களுக்கு அடிவயிற்றின் இயக்கு தசைகளால் நேரிடும் சுருக்கங்கள் துணைசெய்கின்றன. படிப் படியாகக் கருப்பையின் வாய் விரிந்து இறுதியாக ஒரே முயற்சியில் குழந்தை யோனிக்குழலின் வழியாக வெளியே தள்ளப் பெறுகின்றது.

பிரசவ வேதனையின் கால அளவு குழந்தையின் பருமன், தாயின் இடுப்பெலும்புக்கட்டின் அளவுகள், கருப்பைத் தசையின் சுருங்கும் ஆற்றல், தாயின் பொதுவான உடல் நிலை முதலிய பல்வேறு கூறுகளைப் பொறுத்தது. பிரசவம் நடைபெறுவதை மூன்று நிலைகளாகப் பிரித்துக் கூறலாம்.

முதல் நிலை: கருப் பை சுருங்கத் தொடங்கியதிலிருந்து கருப்பையின் வாய் நன்ருக விரிந்து குழந்தையை வெளித் தள்ளுவதற்கு ஏற்ற நிலையை அடையும் வரையிலும் உள்ள நிலையே "முதல் கிலே’ எனப்படும். தொடக்கத்தில் வலி அரைமணிக்கொரு தடவை வந்து கொண்டிருக்கும். நேரம் ஆக ஆக வலி பதினேந்து நிமிடத்திற்கொரு முறை, ஐந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/207&oldid=597992" இலிருந்து மீள்விக்கப்பட்டது