பக்கம்:இல்லற நெறி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 2 #1

மருந்துகளின் தீங்குகள் : பிரசவ வேதனையையே உண ராமல் குழந்தையைப் பெற்றுவிட ஏதாவது வழி இல்லையா? அதற்கு மருந்துகள் இல்லையா? என்று நாகரிக மங்கையர் நினைப்பது இயல்பு: இவற்றைக் காண மருத்துவர்கள் பல காலமாகப் பாடுபட்டு வருகின்றனர். இதுகாறும் பிரசவ வேதனை சிறிதுகூடத் தெரியாமல் பிரசவிக்க ஒரு வழியையோ மருந்தையோ அவர்களால் அறியக்கூடவில்லை. பிரசவவேத னையைத் தாங்க முடியாது கதறும் பெண்களுக்கு அவர்களை அதிகம் அலறவிட்டால் களைத்துவிடுவார்கள் என்று கருதி மருத்துவர்கள் சிலவித மயக்க மருந்துகளைக் கொடுக்கின்ற னர். இவை நோவைத் தணிப்பதுபோல் பாவனை செய்து கருப்பிணியை நல்ல தூக்கத்தில் ஆழ்த்துகின்றன. எனினும், பிரசவ நோவை முற்றிலும்குறைக்க அநுபவம்மிக்க மருத்து வர் விருப்புவதில்லை. அவர் உடலுக்கு நேரிடும் சில தொந் தரவுகளை மட்டுப்படுத்துவாரேயன்றி, பிரசவ வேதனையை முற்றிலும் குறைக்கமாட்டார். பிரசவ வேதனை இருந்தால் தான் குழந்தை வெளிவர இயனும்.

பெரும்பாலான மருந்துகள் பிரசவ வேதனையைக் குறைத்துப் பிரசவ நேரத்தை அதிகரிக்கின்றன. மேலும், இவை தாயின் உடல்வழியாகக் குருதியில் பரவிச் சேயையும் பாதிக்கின்றன. தாயின் வேதனையைத் தணிக்க அளிக்கும் மருந்தின் அளவு சேய்க்கு மிகவும் அதிகமானதால்சிலசமயம் சேய் அதனைத் தாங்கமுடியாது மரித்தும் போகின்றது. தாய் மயக்க மருந்துகளை உண்ட பிறகு பிறக்கும் குழந்தைகள் மூச்சுமுட்டலினல் நீலநிறமாகப் பிறக்கின்றன;சில குழந்தை கள் சுவாசிக்காது அசைவற்றுக் கிடக்கின்றன. அவைகளை விழிக்கச் செய்து சுவாசிக்கச் செய்வதற்குள் மருத்துவர்படும் பாடு பெரும்பாடாகிவிடுகின்றது மயக்க மருந்துகள் கருப் பையின் சுருங்கும் தன்மையையும் பெரிய அளவில்பாதிக்கின் றன. அதனல் குழந்தை பிறந்து நஞ்சு வெளிப்பட்டதும் சட்டெனச் சுருங்கிக் கடினமாகவேண்டிய கருப்பை சுருங் காது தொள தொளவென்று பைபோன்று தளர்ச்சியாக இருக்கும். இதல்ை உள்ளிருந்து குருதி பெருவாரியாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/217&oldid=598015" இலிருந்து மீள்விக்கப்பட்டது