பக்கம்:இல்லற நெறி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 313

19

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலனே விழைகின்றேன்.

சில பெண்களுக்குப் பிரசவம் மிகவும் சிரமமாக முடி கின்றது. கருப்பை, பிரசவப் பகுதி, குழந்தை இவை மூன் றில் ஏதேனும் ஒன்றில் கோளாறு ஏற்பட்டால் பிரசவம் மிகவும் கிரமமானதாக முடிகின்றது. இவை ஒவ்வொன்ரு லும் ஏற்படும் சிரமப் பிரசவத்தை ஈண்டு விளக்குவேன்.

கருப்பைக் கோளாறு: பிரசவம் எளிதானதாக அமைய வேண்டுமாயின் கருப்பை நன்கு விரிந்து சுருங்கவேண்டும்: பிரசவ வேதனை தொடங்கி இடைவிடாது ஏற்பட்டால் குழந்தை குறிப்பிட்ட நேரத்தில் வெளிவந்து விடுகின்றது: அப்படியின்றிக் கருப்பை நன்ருகச் சுருங்கி விரியாமல் இடிக் குச் செய்தால் பிரசவம் காலதாமதமாகி தாய்க்கும் சேய்க் கும் பலவிதமான தொந்தரவுகள் ஏற்படுகின்றன. கருப்ப காலத்தில் நல்ல ஊட்டமுள்ள உணவை உட்கொண்டு உடல்நலத்தைப் பாதுகாவாது அசட்டை செய்யும் இளம் பெண்கள் சிரமப் பிரசவத்திற்கு உள்ளாகின்றனர்: தேவை யான சத்துப்பொருள்கள் கருப்ப காலத்தில் அளிக்கப் பெருததால் கருப்பைத் தசைகள் நன்ருக விரிந்து சுருங்கும் வன்மையற்றுக் குழந்தையை வேகமாகக் கீழே தள்ள முடி யாத நிலையிலுள்ளன. கருப்ப காலத்தில் மாதுளம்பழம் மிகவும் நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும். பழம் இல்லாத காலத்தில் மாதுளங்க இரலாயனம்’ என்ற ஆயுர்வேத டானிக்கைப் பயன்படுத்தலாம். இது கருப்பைத் தசை களுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுத்து வலுவுடையன வாக்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/219&oldid=598019" இலிருந்து மீள்விக்கப்பட்டது