பக்கம்:இல்லற நெறி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

இல்லற நெறி


பிரசவவேதனை தொடங்கியதும் வலி அடுத்தடுத்துவராது அதிகக்காலதாமதம் ஏற்பட்டாலும், அங்ங்ணம்வரும் வலி யின் உறைப்பு குறைந்தாலும் தாயும் சேயும் சிரமப்பிரசவக் திற்கு உள்ளாகின்ற்னர். முதன் முதலாக முப்பது வயதிற்கு மேல் தாய்மையடைகின்ற பெண்களின் கருப்பை இருபது வயதுப் பெண்களின் சருப்பையைப்போன்று மிகவும் வலி மையாக விரிந்து சுருங்குவதில்லை. ஆகவே, குழந்தை பிறக்க உகந்த வயதைத் தாண்டிவிட்ட பெண்கள் பலருக்கு இத ஒல் சிரமப்பிரசவம் உண்டாக வழியாகின்றது. கருப்பை பால் பிரசவம் தாமதம் ஆவது இருவகையால் நேரிடலாம்; கருப்பை தொடக்கத்திலிருந்து நன்முகச் சுருங்காது வலு வற்று வேலை செய்து பிரசவத்தைக் காலதாமதம் செய்ய லாம்; அல்லது. தொடக்கத்தில் நல்ல உறைப்பான வலி யைக் கொடுத்து உற்சாகத்துடன் செயற்பட்ட கருப்பை சில மணி நேரத்தில் சோர்ந்துபோய் நன்ருகச் சுருங்கிவிரியத் தாமதம் செய்து இடக்குப் பண்ணலாம்! தொடக்கத்திலிருந்தே வன்மையின்றிச் செயற்படும் கருப் பையை ஊக்குவிக்க மருத்துவர்கள் பிட்யூட்டரி போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவர். இரண்டாவது வகையான பலவீனத்தை நிவர்த்திப்பதற்குக் கருப்பிணியைச் சில மருந்துகளால் உறங்க வைப்பர். அரை மணி நேரமாவது நன்ருகத் துரங்கிக் களைப்பு நீங்கி விழித்துக்கொண்டதும் கருப்பை மிகவும் பலமாக வேலை செய்யத்தொட்ங்கும். பிரசவ பாகத்தின் கோளாறு: பிரசவம் சிரமமாவதற்குப் பிரசவ பாகத்தில் ஏற்படும் கோளாறுகளும் காரணவாக அமைகின்றன. இடுப்பெலும்புக் கட்டு குறுகியிருந்தாலும், கருப்பையின் வாய் விரிந்து கொடுப்பதில் இடக்குச் செய் தாலும், யோனிக் குழலைச் சுற்றியுள்ள தசைகள் தளர்ந்து இடம் விடாவிட்டாலும் பிரசவம் சிரமமாகின்றது. .

இவ்விடத்தில் இடுப்பெலும்புக் கட்டினப்பற்றிக்கா சிறிது நீ அறிந்து கொண்டாதல் வேண்டும். கருப்பையில்

SAAAAAA SAAAAAS AAASASAAAAAS AAASASAAAAASAAAA ۔ .ـہ ------------ست۔۔۔۔

67. இடும்பெலும்புக்கட்டு-Pelvis

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/220&oldid=1285185" இலிருந்து மீள்விக்கப்பட்டது