பக்கம்:இல்லற நெறி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இல்லற நெறி


பெண்களுக்கும், நாட்டியம், சர்க்கஸ் போன்ற தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கும் யோனிக்குழலைச் சுற்றியுள்ள தசைகள் மிகவும் உறுதியாகிவிடுகின்றன: இவை பிரசவத் தின்போது தளர்ந்து கொடுப்பதில் இடக்குச் செய்து இப் பெண்களைச் சிரமமான பிரசவத்திற்கும் உள்ளாக்குகின்றன. குழந்தையிடம் கோளாறு: சிரமமான பிரசவத்திற்குக் குழந்தையும் ஒரு காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் குழந்தை தலைகீழாகவும் ஆசனம் மேலாகவும் உள்ள ஒரு நிலையில்தான் கருப்பையில் தங்கியிருக்கும் என்பதை ஏற் கெனவே அறிந்து கொண்டிருக்கிருய். இந்த நிலை படத் தில் (படம்-34) காட்டியுள்ளவாறு முதுகு இப்புறமாகவும் அப்புறமாகவும் சிறிது மாறுபட்டு நான்கு விதமாக இருக்க லாம். பிரசவத்தின் பொழுதும் இதே நிலையிலிருந்துதான் கருப்பையினின்று வெளிப்படுகின்றது. முதலில் வெளிப்படு வது தலையாதலின் இந்த நிலை தலை உதயம்' என்று வழங்கப் பெறுகின்றது. பெரும்பாலும் இவ்வகைப் பிரசவம் எளி தாகவே அமைந்து விடுகின்றது:

சில சமயம் குழந்தை கருப்பையில் வேறு விதமாகவும் காணப்பெறுவதுண்டு. தலை மேலாகவும் ஆசனம் கீழாகவும் குழந்தை கருப்பையில் தங்கியிருந்தால் (படம்-35) பிரசவத் தில் முதலில் வெளிப்படுவது ஆசனமாக இருக்கும். இஃது 'ஆசன உதயம்' என வழங்கப்பெறும். இம்மாதிரி குழந்தை இருப்பதற்குக் காரணம் ஒன்றும் கூறமுடியாது. இம்முறை யில் முதலில் ஆசனம், கால்கள், உடல், கைகள், கடைசி யாகத் தலை என்று உறுப்புகள்முறையே வெளிப்படுகின்றன. இம்முறையில் பிரசவம் எப்பொழுதுமே சுகமானதாக முடி வதில்லை. குழந்தை மிகவும் பெரியதாக வளர்ந்திருந்தாலும் இடுப்பெலும்புக் கட்டு சிறிது குறுகியிருந்தாலும் முதல் பிரசவத்தில் ஆசன உதயப் பிரசவம் சிரமமாகி விடுகின்றது: இதில் தாயைவிட சேய்க்குத்தான் ஆபத்து அதிகம்: குழந்தை வெளிப்படுங்கால் முதலில் கால்களும் உடலும் வெளிப்படுகின்றன. வெளிப்புறத்துக் காற்று சில்' என்று குழந்தையின் உடலில் தாக்கியதும் குழந்தை உள்ளே சுவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/224&oldid=1285187" இலிருந்து மீள்விக்கப்பட்டது