பக்கம்:இல்லற நெறி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பொருக்கம் 感罗荔

நிவர்த்தி செய்யாவிடில் தாய்க்கும் சேய்க்கும் மிசவும் அபா யத்தை விளைவிக்கும். உடனே மருத்துவரின் உதவியை நாடவேண்டும். தாமதம் செய்தால் மருத்துவர் வந்தும் பயனில்லாது போய்விடும் குறுக்காகப் படுத்துக்கொண் டிருக்கும் குழந்தையை வெளியேற்ற மிகவும் பலமாகச் சுருங்கி விரியும் கருப்பை நீண்ட நேரம் சென்றதும் மிகவும் சோர்ந்து உள்ளே கிழிந்து விடுகின்றது. கருப்பையின் தசை அறுந்துபோயின் கட்டுக்கடங்காத குருதியோட்டம் ஏற் பட்டுத் தாயும் சேயும் மரித்துவிடுவர். இவ்வகைப் பிரச வத்தை நிகழ்த்த இரு மருத்துவரின் துணைவேண்டும். ஒருவர் கருப்பிணிக்கு மயக்கம் கொடுப்பார்; மற்ருெருவர் பிர சவத்தை நடத்துவார்.

கருப்பிணி நல்ல மயக்கத்தில் ஆழ்ந்து அவளிடம் உணர்வு மறைந்ததும் மருத்துவர் தமது வலக்கையைப் பிரசவ பாகத்தில் நுழைத்துக் குறுக்காகப்படுத்துக்கிடக்கும் குழந்தையை மெல்லத் திருப்பி ஒரு காலே முதலில் வெளிக் கொணர்வார். பிறகு இன்னொரு காலையும் வெளிக் கொணர்ந்து ஆசன உதயத்தில் நடத்துவதுபோல் கால்கள், ஆசனம், வயிறு, நெஞ்சு, கைகள், பிறகு தலை என்று குழந் தையின் பாகங்களை முறையே வெளிப்படுத்திப் பிரசவத்தை வெற்றியுட்ன் முடிப்பார்.

சிசேரியன் செக்ஷன் : இனி, மேலே குறிப்பிட்ட 'சிஸேரியன் அறுவை முறை என்பது என்ன என்பதைச் சிறிது விளக்குவேன். வயிற்றின்வழியாகக் குழந்தையை எடுத்தலே சிசேரியன்' அறுவை முறை என்று வழங்கப் பெறுகின்றது: 'சிசேரியன் செக்ஷன்' என்று இந்த முறைக் குப் பெயர் ஏற்பட்டதற்குப் பலவிதமான கதைகள் வழங்கு கின்றன. ஜூலியஸ் சீஸர்' என்பவர் தாயின் வயிற்றின் வழியே கிழித்தெடுக்கப்பெற்ற பிள்ளையென்றும், அதனல் தான் இம்முறைக்கு இப்பெயர் ஏற்பட்டது என்றும் ஒருகதை

I 7. og vestusid Gawri - Juli as Caesar

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/227&oldid=598037" இலிருந்து மீள்விக்கப்பட்டது