பக்கம்:இல்லற நெறி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-1

மணப் பொருத்தம்

வாழ்க்கையின் தத்துவம் திருமணத்தில் தொடங்கு கின்றது. அதுவே அறனும் அன்பும் உடைய இல்வாழ்க் கையில் விளக்கமடைகின்றது. இல்வாழ்க்கை சிறப்புடன் அமைய வேண்டுமாயின் ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கப்பெறுபவர் எல்லா நில்ை களிலும் சரியாக அமைய வேண்டும். ஒத்த உடல் நிலை, கிட்டத்தட்ட ஒத்துப்போகும் உள்ளக் கிளர்ச்சி நிலை, தேவையான அளவு பொருளாதாரநிலை முதலியவை நன்கு அமைய வேண்டும். இக் குடும்பத்தின் நன் மக்கட் பேறு ஏற்பட வேண்டுமாயின், மணமக்களாக அமைவோரின் மரபுவழி நன்கு பொருந்த வேண்டும்; அறிவியல் அடிப் படையில் மரபுவழியைப்பற்றிய அறிவு மணமக்களுக்கு ஏற்படவேண்டும். மரபுவழியாக இறங்கும் உடல்-உளக் கூறுகள், பிறவி சார்ந்த குறைகள், மரபுவழியாகக் கடத் தப்புெறும் நோய்கள் முதலியவைபற்றிய சில கருத்துக்களே அறிதல் மிகவும் இன்றி ரதது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மரபுவழி, கு இவற்றின் பங்கு என்ன என்பதையும், உறவினர்களுக்குள் மண உறவு கொள்வதன் விளைவுகள் யாவை என்பதையும் அறிதல் பெரிதும் பயன் தரும். இச் செய்திகள் பற்றிய பல கருத்துக்கள் ஆறு கடிதங்களில் (1-6) இந்த இயலில் கூறப்பெற்றுள்ளன.

இ. நெ-?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/23&oldid=598043" இலிருந்து மீள்விக்கப்பட்டது