பக்கம்:இல்லற நெறி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

இல்லற நெறி


கொண்டு ஃபிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து சேர்ந் தார். இவருடைய மக்கள் மூத்த பீட்டர். இளைய பீட்டர் என்ற இருவரும் நாவித மருத்துவர்களாக இருந்தனர். கி. பி. 1600-ஆம் யாண்டு இது கண்டறியப்பெற்றிருக்கவேண்டும் என்று ஊகிக்கப்பெறுகின்றது. கி.பி. 1600லிருந்து 1726 வரை சேம்பர்லீன்கள் இக்கருவியின் பயனை மறைவாகவே வைத்துக் கொண்டிருந்தனர். கி. பி. 670-ஆம் யாண்டு இந்தக் குடும்பத்தில் பிறந்த ஹ என்பவர் கடன்தொல்லை காரணமாக ஹாலந்துசென்று அங்கு மறைந்துகொண்டார்; அங்கிருந்த மருத்துவர் ஒருவருக்கு ஃபார்செப்ஸ் கருவி யைப் பயன்படுத்தும் இரகசியத்தை விற்றுக் கொஞ்சம் பொருள் திரட்டிக்கொண்டு மீண்டும் இங்கிலாந்து வந்து சேர்ந்தார். அவர் முழு விவரத்தையும் கூருது ஏமாற்றிவிட் டதாகச் சொல்லப்பெறுகின்றது. சேம்பர்லின் தலைமுறை மருத்துவர்கள் மறைத்து வைத்திருந்த இரகசியம் எப்படி யோ மெதுவாக வெளிவந்து கி. பி. 1728-ஆம் யாண்டு ஏப்பிரல் மாதம் முதன் முதலாக இங்கிலாந்தில் வில்லியம் கிப்போர்ட்" என்ற மருத்துவர் ஒருவர் இக்கருவியைக் கையாண்டு ஒரு சிரமப் பிரசவத்தை வெற்றியடைச் செய் தார். இவர் இந்தக் கருவியின் பெருமையை மருத்துவர்கள் அனைவருக்கும் வெளியிட்டார்; விளக்கியுரைத்தார்: 1773-ஆம் யாண்டு எட்மண்ட் சாப்மேன் என்பார் இக்கருவி யைப் பயன்படுத்தும் முறை, அதன் பயன்கள் முதலியவற் றைக் குறித்து ஓர் ஆராய்ச்சி நூலினை வெளியிட்டார். அதன் பிறகு இம்முறை உலகெங்கும் பரவியது. இன்று நாடோறும் ஆயிரக்கணக்கான தாய்மாரும் சேய்களும் இக் கருவியினுல் இறப்பிலிருந்து காப்பாற்றப்பெறுகின்றனர்; பழங்காலத் தில் ஒரு பெண் கருவுயிர்க்குங்கால் இயல்பிகந்த ஒரு சிக்கல் ஏற்பட்டால் தாயும் சேயும் மரிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. எண்ணற்ற பெண்கள் தொற்றுநோய்களாலும் கவனமற்ற சுகாதாரத் தாலும் மாய்ந்தனர். நவீன நாகரிகப் பெண்கள் பலருக்குச் சிரமப் பிரசவம் ஏற்படினும் பிரசவ மருத்துளத்தின் வியத்தகு வளர்ச்சியாலும் யுக்தி முறைகளா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/230&oldid=1285190" இலிருந்து மீள்விக்கப்பட்டது