பக்கம்:இல்லற நெறி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 感露廖

லும் தாயும் சேயும் இறவாது காக்கப்பெறுகின்றனர். இன்று இவர்களின் இறப்பு விகிதமும் அதிகமாகக் குறைந்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

ஒய்வு: இனி, கருவுயிர்த்த பெண்ணின் ஒய்வைப்பற்றிச் ஒறிது கூறுவேன். கருப்பம் ஒரு பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளை மட்டிலுமேயன்றி அவளது முழு உடலையும் பாதிக்கின்றது. பிரசவவேதனை பிரசவ வழியிலுள்ள இழை யங்களையெல்லாம்.மிகவும் பாதிக்கின்றது. கருப்பையின்வாய், யோனிக்குழல், யோனி ஆகியவை மிக அதிகமாக விரிந்து குழந்தையை வெளியேற்றுகின்றன. இம்மாற்றங்கள் யாவும் தற்காலிகமாக நடைபெறுபவையே. இவற்றின் சுருக்கமும் பழுது நீங்கலும் மிக விரைவாக நடிைபெறுகின்றன. ஆறி லிருந்து எட்டு வாரங்களுக்குள் இவை தம் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகின்றன. சில சமயம் சிரமப் பிரசவங்களால் பிறப்பு வழியின் தசை உடனே சுருங்க முடியாதநிலை ஏற்பட் டால் அறுவைமுறை சிகிச்சை மேற்கொள்ளப்பெறுகின்றது.

பிரசவித்த பெண் உடனே எழுந்து உட்காருவது தவறு. சுமார் இரண்டு மணி நேரமாவது அவள் அசையாது ஒரேநிலை யில் படுத்திருக்கவேண்டும் பலவீனமான கருப்பை கவிழ்ந்து கொள்ளாதிருக்கவே படுத்திருப்பது அவசியமாகின்றது: முதுகு வலித்தால் ஒருவர் உதவியுடன் மறுபக்கம் திருப்பிப் படுத்துக்கொள்ளலாம். மலங் கழித்தல், சிறுநீர் கழித்தல் போன்றவற்றை ஒருவர் உதவியால் படுத்தபடியே செய்து முடித்துக்கொள்ளவேண்டும். பிரசவித்த மூன்ரும் நாள் எனிமா கொடுத்துக் குடல் சுத்தமானபிறகு எழுந்து உட்கார லாம். நான்காவது, ஐந்தாவது நாட்கள் அறைக்குள்ளேயே எழுந்து நடமாடவேண்டும். இது கருப்பை வேகமாகச் சுருங்குவதற்குத் துனை செய்யும் என்று மருத்துவர்கள் கருது கின்றனர். பழங்காலத்துப் பெண்கள் பிரசவித்த சில மணி நேரந்திற்குள் தம் அலுவல்களில் இறங்கினர் என்று கருதி நவீன நாரியர் அம் முறையை மேற்கொண்டு பலவித சிக்கல்

@一』」

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/231&oldid=598047" இலிருந்து மீள்விக்கப்பட்டது