பக்கம்:இல்லற நெறி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 227

ஹார்மோன்களால் பால் சுரத்தல் கட்டுப்படுத்தப்பெறுகின் றது என்று அறியப்பெற்றுள்ளது: நஞ்சுக்கொடி இந்த ஹார்மோன்களின் செல்வாக்கைக் குறைக்கின்றது;பிரசவத் திற்குப் பிறகு நஞ்சுக்கொடி வெளிப்பட்டதும் கொங்கைகள் பால் சுரக்கின்றன. பால் சுரப்பி படத்தில் (படம்-37)காட் டப்பெற்றுள்ளது. இதில் பதினைந்திலிருந்து இருபதுவரை மெல்லிய கால்வாய்கள் உள்ளன. இவை தோலின் அடியில் அமைந்து முலைக்காம்பில் ஒன்று சேர்கின்றன: இக் கால்வாய் களின் முடிவுகள் காம்பைச் சுற்றிலுமுள்ள வட்டமான கரு நிறப் பகுதியில் உள்ளன: ஒரு பெண் பூப்பெய்தும் காலத்தில் தசை இழையங்கள் இந்தக்கால்வாய்களின் இடையே திரண்டு கொங்கைகள் அரைக் கோள வடிவில் எழும்பி உருண்டு திரள்கின்றன. ஆளுல், இவை கருப்பக் காலத்தில்தான் முழு வளர்ச்சி எய்துகின்றன. இப்பொழுதுதான் பாலும் சுரக்கின்றது. இவ்விடத்தில் ஒன்று நினைவிலிருத்தப்பெறு தல் வேண்டும். கொங்கைகளின் பருமனுக்கேற்றவாறு பால் அதிகமாக இருக்கும் என்று கருதுதல் தவறு. மூன்று நிலைகள் படத்தில் காட்டப்பெற்றுள்ளன. முதல் நிலையில் பால் சுரப்பிகள் நன்னிலையில் உள்ளன. இரண்டாவது நிலையில் பால் சுரப்பிகளுக்கிடையே சற்று அதிகமாகக் கொழுப்பு திரண்டுள்ளது. மூன்ருவது நிலையில் ஏராளமான கொழுப்பு திரண்டு கொங்கைகளின் தோற்றம் பெரிதாக உள்ளது; அன்றியு. .இதில் பால் சுரப்பிகளும் குறைவாகவே உள்ளன. இதில் குறைந்த அளவே பால் சுரக்கும், கருவுயிர்த்த பெண் னிடம் சுமார் எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் பால் சுரக் கின்றது. புனிற்றிளங்குழவிக்குத் தாய்ப்பாலே சிறந்த உணவு என்று திட்டமாக முடிவு காணப்பெற்றுள்ளது: தாய்ப்பால் மட்டிலும் பருகும் குழவிகளிடையே குடல் தொந்தரவுகள் போன்றவை தோன்றுவதே இல்லை. இக் குழந்தைகள் உள்ளக்கிளர்ச்சிகளிலும் சமநிலை எய்தியுள்ள னர். எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் வரை குழந்தைக் குத் தாய்ப்பால் கொடுக்கலாம். அதற்குமேல் கொடுப்பது தாயின் உடல்நிலையைப் பாதிக்கும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/233&oldid=598051" இலிருந்து மீள்விக்கப்பட்டது