இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்
சாதலுக்கோ பிள்ளை தவிப்பதற்கோ பிள்ளை
சந்தான முறைநன்று தவிர்க்குமுறை தீதோ
-பாரதிதாசன்
நாம் கருத்தடைக்கு ஆதரவு தருவது அதனல் ஏற்படும் பயனை உத்தேசித்து மட்டுமல்ல; நாம் விலங்குகளல்ல, மனிதர்கள் என்பதைக் கருதியே.
-ஜார்ஜ் பெர்ளுட்ஷா