பக்கம்:இல்லற நெறி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இல்லற நெறி


21

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலனே விழைகின்றேன்.

குடும்பக் கட்டுப்பாடு-விளக்கம்: இனப்பெருக்கத்தின் ஒருமுக்கியகூறு குடும்பக்கட்டுப்பாடு என்பது. அஃதாவது, தம்பதிகள் குழந்தைகள் வேண்டாம் என்று கருதுங்கால் எச்சரிக்கையான முறைகளைக் கையாண்டு கலவி புரிவதும், குழந்தைகள் வேண்டும் என்று கருதுங்கால் இம் முறைகளைக் கைவிடுவதுமான முறையே குடும்பக் கட்டுப்பாடு ஆகும். ஒரு வகையில் குடும்பக் கட்டுப்பாடு என்பது கருத்தடை யாகும். ஆனால், அது முற்றிலும் கருத்தடையாகாது; அது தாம்பத்திய உறவினை அறவே புறக்கணிக்கும் திட்டமுமன்று: இத்தகைய ஒரு திட்டத்தை நம்முடைய அரசினர் மேற் கொண்டுள்ளனர்; மக்களிடையே அது பரவுவதற்குப் பிரசா ரமும் செய்து வருகின்றனர். இத்தகைய திட்டத்தை ஒவ் வொரு மணமக்களும் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இதுபற்றிய சில கருத்துகளை இக் கடி தத்திலும் இதனை அடுத்து எழுதும் சில கடிதங்களிலும் தெரி விக்க விரும்புகின்றேன்:

குடும்பக் கட்டுப்பாட்டின் இன்றியமையாமை: ஒரு குழற் தையைப் பெற்றெடுக்கும் பெற்ருேர் முக்கியமான ஒரு பெரிய பொறுப்பினை வகிக்கின்றனர் என்பதை நீ உணர வேண்டும். அந்தக் குழந்தை அகால மரணமடையாமல்: அதற்குத் தக்க உண்டியும் பிறவும் அளித்து அதன் உடல் நலத்தைப் பாதுகாகக்கவும் அதற்கு வாழ்க்கையில் நல்ல

i. CŞ(9thué à têGütsm ()—Family planning

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/250&oldid=1285199" இலிருந்து மீள்விக்கப்பட்டது