பக்கம்:இல்லற நெறி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு £47

களே அவன் நன்கு புரிந்துகொண்டபிறகு. அவன் சிசுக்கொை செய்ய வேண்டியதில்லை; கருச்சிதைவு செய்து பெண்ணின் உடல் நலத்தையும் குலைக்க வேண்டியதில்லை; அறிவிய லடிப்படையில் அமைந்த கருத்தடைமுறைகளைக் கையாண்டு குடும்பத்தின் அளவினைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

எண்ணிக்கைக் குறைப்பு: கருத்தடை முறைகளைப்பற் றிய கருத்துகள் மக்களிடையே நன்கு பரவி வேரூன்றி விட்டால் சிலர் தாய் தந்தையராகு பொறுப்பினையேம் தட்டிக் கழித்துவிடுவர் என்று சிலர் கருதுகின்றனர். சாதா ரணமாக மணம் புரிந்துகொண்ட அனைவருமே குழந்தைப் பேற்றை விரும்புவர்.

மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன் நன்கலம நன்மக்கட் பேறு."

என்ற பொய்யாமொழியின் உண்மையினை எண்ணி ஆராய்க.

மேலும. குழந்தைச் செல்வத்தின் சிறப்பைக் கவிஞர்கள் பல படக் கூறியிருத்தலைக் கற்ருேர் அனைவருமே நன்கு அறிவர்: கருத்தடை முறைகளால் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பரேயன்றிக் குழந்தைகளே இல்லாது செய்ய எவரும் ஒருப்படார். நம்முடைய தேர்ந்தெடுத்த திட்டத்தால் குழந் தைகள் பிறக்கவேண்டும்; குழந்தைகளைத்தற் செயலாகப் பிறக்க விடுதல் கூடாது. திட்டமிட்டுப் பிறக்கும் குழவிகளை "அறிவறிந்த நன்மக்களாகச் செய்யவேண்டும்; அவர்களே பாதுகாப்புடனுள்ள குழவிகள். அவர்களே உடல், உள்ள, மீப்பண்பு வளர்ச்சியினைத் தக்க முறையில் பெறுவர். மனித னிடம் கலவி புரியும் செயல் இனப்பெருக்கத்திற்கென்று மட் டிலும் அமைவதில்லை. விலங்கு வாழ்க்கையில் அது கருவுறு தலுக்கு முற்செயலாக அமைகின்றது. ஆனால், மானிட வாழ்க்கையில் அஃது இருவரும்-கணவனும் மனைவியும்உடல் உள்ள உறவு கொள்வதற்கும் அடிப்படையாக உதவு கின்றது. இத்தகைய உறவிற்கு அடிக்கடி மனைவி கருப்பம்

3 குறள்-60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/253&oldid=598097" இலிருந்து மீள்விக்கப்பட்டது