பக்கம்:இல்லற நெறி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இல்லற நெறி


உறுதல் தடையாகின்றது. கருத்தடை முறை அதனைத் தடுத்து இவ்வுறவு வளர்வதற்குத் துணை செய்கின்றது:

இயற்கைக் கட்டுப்பாடு: சிலர் குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்தால் தாயிடம் கருப்பம் ஏற்படாது என்று எண்ணுகின்றனர். கருப்ப காலத்தில் மாதவிடாயும் முட் டைப் பக்குவமடைதலும் நின்று போகின்றன. இவை மீண் டும் ஏற்பட்டால் அக்காலத்தில் கருவுறுதல் சாத்தியப்பட லாம். குழந்தை பிறந்த சில மாதங்களில் (இரண்டிலிருந்து ஆறு மாதங்களுக்குள்) ஒரு பெண்ணிடம் மாதவிடாய் வட் டங்கள் மீண்டும் தோன்றுகின்றன. இவ்வாறு மாதவிடாய் தோன்றுங் காலத்தில் முட்டைபக்குவப்படுதலும் சேர்ந்து தோன்றலாம்; அல்லது தோன்ருமலும் போகலாம். சிலர் மாதவிடாய் தோன்றுவதற்கு முன்னரும் கருவுறுகின்றனர். பலர் குழந்தை பால் குடிக்கும் காலத்திலேயே கருவுறுகின்ற னர். எனவே, குழந்தை பால் குடித்தல் காலம் பென் கரு வுருத காலம் என்று கொள்வதற்கு மருத்துவச் சான்று ஒன்றும் இல்லை: பழங்காலத்திலிருந்ததுபோல் குழந்தை பால் குடிக்கும் காலத்தில் கணவன் இணைவிழைச்சு புரிதல் கூடாது என்ற இயற்கைக் கட்டுப்பாடு இருந்தால் பெண் கருவுறுவதற்கு வாய்ப்பே இல்லை.

மேற்கூறிய முறை சிறந்த கருத்தடை முறையே. ஆனால், அஃது இன்றைய சமுதாய வாழ்க்கைக்குப் பொருந்தாது; அது கணவனின் பரத்தமை வாழ்க்கைக்கு வழி செய்வது மாகும். பழந்தமிழ் இலக்கியங்களில் மனைவியின் மாத விடாய் காலத்திலும், மனைவி ஈன்றணிமைக் காலத்திலும் கணவன் பரத்தமை வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பான் என்ற செய்தியைக் காணலாம். பிற்காலஇலக்கிய நூலாசிரியர்கள் இம்மாதிரி ஒரு மரபினைக்கொண்டு நூல்களை இயற்றினர் என்று இதனைக்கொள்ளவேண்டுமேயன்றி, பழந்தமிழ் மக்கள் கண்ட தலைவனிடம இத்தகைய பழக்கம் இருந்ததாகக் கொள்வதற்கில்லை. அப்படியிருப்பினும் அது மனைவியின் படைத்துமொழி கிளவியாகும் என்பது உணரத்தக்கது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/254&oldid=1285201" இலிருந்து மீள்விக்கப்பட்டது