பக்கம்:இல்லற நெறி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

இல்லற நெறி


22

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன் நலனேயாகுக.

சந்த இயக்க முறை: கருத்தடை முறைகளில் மிகவும் இயற்கையானதும் யாதொரு தீங்கு பயக்காததுமான முறை சந்த இயக்க முறை' என்பதாகும். ஒரு பெண்ணின் மாத விடாய் வட்டத்தில் கருத்தரி நாட்களும் கருத்தரியா நாட் களும் ஒருவகைத் தாள இலயம்போல் மாறிமாறி வருவதை இன்று ஆய்வுகள் மூலம் அறுதியிட்டுள்ளனர், குழந்தை வேண்டுமாயின் கருத்தரி நாட்களில் கூடுவதும், வேண்டா மென்ருல் கருத்தரியா நாட்களில் மட்டிலும் கூடுவதும் இம் முறையின் தத்துமாகும்.

மாதவிடாய் வட்டத்தில் கருத்தரியா நாட்களும் உள் ளன என்ற கருத்து மிகப் பழைமையானது. இரண்டாயிரம் யாண்டுகட்கு முன்னரே நம்நாட்டு மருத்துவர்கள். இதனைக் கூறியுள்ளனர்; தொல்காப்பியத்தின் கற்பியல் நூற்பா. ஒன்றும் நேரல் முறையில் கருத்தரிப்புபற்றிக் குறிப்பிடுவ தாகக் கருதலாம். மாதவிடாய்காலத்திலும் அதற்குப்பின்னர் ஒருவார காலத்திலும் புணர்ச்சி கூடாது என்று வரையறுக் கும் மோசைச் சட்டங்களிலிருந்து (Mosaic aws) ஒரு குறிப் பிட்ட நாட்களில்தான் கருத்தரிப்பு ஏற்படுகின்றது என்ற கருத்தினைப் பண்டையோர் அறிந்திருக்கவேண்டும் என்று கருதலாம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டில் உரோம் என்ற நகரிலிருந்த சோரனஸ் என்ற யவன மருத்துவர் கருவுறு

6, & #5 Qués open sp-Rhythm method. 7. தொல்-பொருள் கற்பு-46 (இளம்) 8. G&mproTsin-Sorasios

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/258&oldid=1285203" இலிருந்து மீள்விக்கப்பட்டது