பக்கம்:இல்லற நெறி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

இல்லற நெறி


உள்ளது என்பது பல்வேறு உடற்கூறுபற்றிய பல்வேறு சங்கற்பங்களைப் பொறுத்தது. ஒரு பெண்ணிடம் திங்கள் தோறும் ஒரே ஒரு முட்டை' வெளிப்படுகின்றது என்பதும் அந்த முட்டை தன்னுடைய உயிர்ச் சக்தியை-அஃதாவது தன்னுடைய கருவுறுந் தன்மையை-மிகக் குறுகிய கால அளவே கொண்டுள்ளது என்பதும், இந்தக் கால அளவு 48 மணி நேரத்திற்கு மேற்படுவதில்லை என்பதும் இன்று பொது வாக அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பெற்ற உண்மை களாகும். எனவே முட்டை வெளிப்பட்டவுடன் அன்றி வெளிப்பட்ட சில மணி நேரத்திற்குள் அது கருவுருவிடில், ஒரு மாதம் கழித்து மீண்டும் ஒரு முட்டை பக்குவம் அடை யும் வரை அப்பெண் சூல்கொள்ளல் என்பது இயலாத செயலாகும்

அங்ங்ணமே, புணர்ச்சியின் பொழுது ஆண் வெளிப்படுத் தும் விந்தணுக்களும் நீண்டகாலம் உயிரோடிருப்பதில்லை அவையும் கருப்பை அல்லது கருக்குழல்களுள் நுழைந்த 48 மணி நேரத்திற்குமேல் கருவுறுந் தன்மையை இழந்து விடுகின்றன. ஆகவே, முட்டை பக்குவம் அடையும் காலத் தில்தான் சூல் கொள்ளல் சாத்தியப்படும் என்பதும், இக் காலத்தில் மேற்கொள்ளப்பெறும் இணைவிழைச்சே29 கருப் பத்திற்குப் பயனுடையதாகும் என்பதும் கொள்கையளவில் உண்மையாகின்றன. முட்டை பக்குவமடையாத ஏனைய நாட்களில் மேற்கொள்ளப்பெறும் கலவியால் கருப்பம் ஏற் படுவதில்லை. பெண்ணின் பிறப்புறுப்புப் பாதையில் முட்டை யில்லாதிருப்பதும், அடுத்த முட்டை வரும் வரையில் விந்த ணுக்கள் உயிரோடு இருக்க முடியாமையுமே இதற்குக் கார

16. s šis situšisch-Assumptions 1 7. gpěž.&0 L --Qvu;na 18. விந்தனுக்கள்-8pernis 19. 35(5&659&-Fallopian tube 20, go&sdopéo-Coitus

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/260&oldid=1285204" இலிருந்து மீள்விக்கப்பட்டது