பக்கம்:இல்லற நெறி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

இல்லற நெறி


ஒரு மாதவிடாய் வட்டத்தின் சராசரி காலம் 28 நாட்களா கும். ஆயினும், இக் கால அளவு சில சமயம் அதிகமாகவும், சில சமயம் குறைவாகவும் உள்ளது. சாதாரணமாக ஒரு நீண்ட மாதவிடாய் வட்டத்திற்கும் ஒரு குறுகிய மாத விடாய் வட்டத்திற்கும் உள்ள கால வேறுபாடு ஆறிலிருந்து எட்டு நாட்களுக்கு மேற்படுவதில்லை ஒரு பெண்ணிடம் அடுத்த மாதவிடாய் வட்டம் தொடங்குவதற்கு 14 அல்லது 16.நாட்களுக்கு முன்னர் சூற்பையிலிருந்து முட்டை விடுவிக்கப் பெறுகின்றது என்பது இன்று கண்டறியப் பெற்றுள்ள உண் மையாகும். எனவே, ஒரு பெண்ணின் மாதவிடாய் வட்டத் தின் கால அளவையும் அதன் வேறுபாடுகளையும்? அறியக் கூடுமாயின் அவற்றின் அடிப்படையில் முட்டை பக்குவ மடையும் நாளை அறுதியிட முடியும்.

சில எடுத்துக் காட்டுக்கள்: மேற்கூறியவற்றைச் சில எடுத்துக்காட்டுகளால் விளக்குவேன்; ஒரு பெண் 30 நாட் களுக்கு ஒரு முறை மிக ஒழுங்காக மரிதவிடாய் ஆகின்ருள் என்று கொள்வோம். அவள் மாதவிடாய் ஆகும் நாட்களும் அவளிடம் முட்டை பக்குவப்படும் நாட்களும் அடுத்தபக்கத் திலுள்ள விளக்கப்படத்தில் (படம்-44) காட்டப்பெற்றுள் ளன. முதற் பத்தியில் மாதவிடாய் தொடங்கும் நாட்கள் காட்டப்பெற்றுள்ளன. 80 நாட்கள் மாதவிடாய் வட்டக் கால மாதலின், முப்பதாவது பத்தியில் பெருக்கற் குறி (X) இடப்பெற்றிருக்கின்றது. இதைக் கணக்கிடுங்கால் முதல் மாதவிடாய் தோன்றும் நாளிலிருந்து அடுத்த மாதவிடாய் தோன்றும் நாள்வரைக் கணக்கிடவேண்டும். முதல் மாத விடாய் தோன்றும் நாளைக் கணக்கிற்கு எடுத்துக் கொண்டு, அடுத்த மாதவிடாய் தோன்றும் முதல் நாளை விட்டுவிட வேண்டும். படத்தில் கண்டபடி ஒரு பெண்ணின் மாத விடாய் மே மாதம் முதல் தேதியில் தொடங்குகின்றது; அடுத்த மாதவிடாய் மே 30இல் தொடங்குகின்றது. ஒரு பெண்ணிடம் இக்கால வரையறை ஒராண்டிற்குச் சரியாக

86. Gorg/timóðiðr-Variations

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/262&oldid=1285205" இலிருந்து மீள்விக்கப்பட்டது