பக்கம்:இல்லற நெறி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

இல்லற நெறி


இருக்குமாயின் அவளிடம் முட்டை வெளிப்படும் நாளும் ஒழுங்காக இருக்கும். இத்தகைய ஒழுங்கான மாதவிடாய் வட்டம் எளிதான மாதவிடாய் வட்டம்” என்று வழங் கப் பெறுகின்றது. இவ்வகை வட்டம், 27, 28, 29, 31, 32 முதலிய நாட்களாகவும் இருப்பதுண்டு. ஒரு மாதவிடாய்க் கும் அடுத்து நிகழும் மாதவிடாய்களுக்கும் இடைபட்ட நாட்கள் ஒரே எண்ணிக்கையில் இருப்பதுதான் எளிய மாதவிடாய் வட்டம் ஆகும் என்பதை ஈண்டு நீ மனத்தி விருத்துவாயாக.

முட்டை பக்குவப்படும் நாட்களும் வட்டக் குறியால்(0) படத்தில் காட்டப்பெற்றுள்ளன: ஓராண்டுக் காலம் ஆராய்ந்து நாம் ஒரு பெண்ணினுடைய மாதவிடாய் வட்டம் "எளிதான வட்டமாக இருப்பதை அறிந்துகொண் டால், அவளிடம் முட்டை பக்குவப்படுங் காலத்தையும் எளிதில் கணக்கிட்டுக் கொள்ள முடியும். சூற்பையின் மேற் புறத்தில் உருண்டையான முட்டையணு வளர்ந்து முதிர்ச் சியுறுங்கால் அது சவ்வு போன்ற உறையை உண்டாக்கும் என்றும், இந்த உறை வெடித்து முட்டை விடுபட்டதும் இந்த உறையில் மஞ்சள் நிறப் பொருள் (கார்ப்பஸ் லூட்டி யம்) உண்டாகும் என்றும் முன்னர்க் குறிப்பிட்டுள்ளேன்.23 இந்த மஞ்சள் நிறப் பொருள் சரியாக 14 நாட்கள்-மாத விடாய் வட்டத்தின் கால அளவு எப்படியிருந்தாலும்கருப்பையை ஆட்சி புரிகின்றது. எளிதான மாதவிடாய் வட்டத்தைக் கொண்ட ஒரு பெண்ணின் அடுத்த மாத விடாய் எந்த நாளில் தொடங்கும் என்பதைக் கணக்கிடக் கூடுமாதலால், அந்நாளிலிருந்து 14 நாட்கள் பின்னேக்கிக் கணக்கிட்டு மஞ்சட் பொருளின் செல்வாக்கு எந்த நாளில் தொடங்குகின்றது என்பதை நிலை நாட்டுதல் கூடும் மஞ்சட்

27. sraizrsa udržaol-frü ail-l–b–Simple menstr283 (opt-onli-suggll—Egg cell ual cycle 29: இந்நூல்-பக்கம் 149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/264&oldid=1285206" இலிருந்து மீள்விக்கப்பட்டது