பக்கம்:இல்லற நெறி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 酸莓岛

பொருள் உண்டாகும் 42 மணி நேரத்திற்கு முன்னர் முட்டை விடுபடுதல் நடைபெறுகின்றதாதலின், அந்தப் பெண்ணிடம் அடுத்த மாதவிடாய் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் முட்டை பக்குவப்படுகின்றது என்று உறுதியாகக் கூறமுடிகின்றது.

257-ஆம் பக்கத்திலுள்ள விளக்கப் படத்தில் அவளு டைய மாதவிடாய் வட்டம் மே மாதம் முதல் நாள் தொடங்கி 30-ஆம் நாள் முடிவு பெறுகின்றது. நாம் மே 30 ஆம் நாளிலிருந்து பதினைந்து நாட்கள் பின்ளுேக்கிக் கணக்கிட்டால், அவளிடம் மே மாதம் 18 ஆம் நாள் மூட்டைப் பக்குவப்படுதல் நடைபெறுகின்றது என்பதை அறிந்து கொள்ளுகின்ருேம், அவளுடைய அடுத்த மாத விடாய் வட்டம் ஜூன் 29-ஆம் நாள் முடிவு பெறுகின்றது. என்பதையும், நாம் முன்னதாகவே அறுதியிட்டு விடலாம். இந்த நாளிலிருந்து (மாதவிடாய் வட்டித்தின் இறுதி நாளே யும் சேர்த்துக்கொள்ள வேண்டும்) 15 நாட்களைக் கழித்து அவளிடம் அடுத்த முறை முட்டை பக்குவப்படுதல் ஜூன் 15-ஆம் நாளில் நடைபெறுகின்றது என்பதையும் நாம் அறுதியிட்டு விடலாம். எளிதான மாதவிடாய் வட்டத்தை யுடைய பெண்ணிடம் முட்டை பக்குவப்படும் நாட்கள் பதினுழுவது பத்தியில் வட்டக் குறியால் (0) காட்டப் பெற்றிருப்பதைப் படத்தில் காண்க. மேற்காட்டிய விளக்கப்படத்திலுள்ளது போன்ற முறையை ஒரு தனிக் குறிப்பேட்டிலோ அல்லது தனித்தனித் தாளிலோ மேற் கொள்ளலாம். இம்முறை பேராசிரியர் காஸ் என்பார் காட்டியதாகும்.

மாதவிடாய் வட்டம் குறுகியதாகவோ அல்லது நீண்ட தாகவோ இருப்பின், முட்டை பக்குவமடையும் நாளும் முன்னதாகவோ அல்லது தாமதப்பட்டோ வரும். எடுத்துக் காட்டாக, ஒரு பெண் 24 நாட்களுக்கு ஒரு முறை துாரமா ல்ை, அவளிடம் மாதவிடாய் தொடங்கிய 9-வது நான் முட்டை பக்குவமடையும்; அவள் 33 நாட்களுக்கு ஒரு முறை தூரமானல், அவளிடம் மாதவிடாய் தொடங்கிa

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/265&oldid=598125" இலிருந்து மீள்விக்கப்பட்டது