பக்கம்:இல்லற நெறி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 露置

கூறலாம்; ஒருவர் மற்ருெருவர்பால் அன்பு, நட்பு இவற்றின் அடிப்படையில் நிலையான உறவு கொள்ளல்; உரிமையாகவும் சுதந்திரமாகவும் இணைவிழைச்சு புரிதல்; குடும்பம் அமைத்து இல் வாழ்க்கையாகிய நல்வாழ்க்கையை அமைத்துக்கோடல்-ஆகிய மூன்று நோக்கங்களுக்காகவே நாகரிகமடைந்த மக்கள் ‘திருமணம் என்ற ஒரு தெய்விக ஏற்பாட்டைக் கண்டனர். இதுவே உயர்ந்த பண்பா டென்றும் எல்லா நாட்டு அறிஞர்களும் ஒரு மனத்துடன் ஒப்புக்கொண்டுள்ளனர். உடல்-மனம்-அறிவு என்னும் மூன்றும் ஒருமைப்பட்ட வாழ்வே அன்புக்குரிய இல்வாழ் வாகும். அதுவே திருமணத்தின் உண்மை நோக்கங்களே நிறைவேற்றுவதுமாகும்.

மானிட இனத்தின் சிறப்பியல்பு: திருமண ஏற்பாட்டினல் ஒர் ஆண்-பெண்ணிடம் சிறந்த நட்பு ஏற்படுகின்றது. இரு வரிடையேயுள்ள பொதுக் கவர்ச்சிகள், பொதுவான குறிக் கோள்கள் ஆகியவை இந்த உறவைப் பின்னும் உறுதியடிை. யச் செய்கின்றன. இருவரும் சேர்ந்து வாழ்ந்து தம் அதுப வங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இடையறவு படாத இன்பம் துய்க்கவும் விழைகின்றனர். மேலும், இருவரும் உடலுறவு கொள்ளவும் விரும்புகின்றனர். தமிழ் நூல்கள் உள்ளப் புணர்ச்சியைப் பெரிதும் போற்றிப் பாராட்டினு லும், மெய்யுறு புணர்ச்சியே உள்ளப் புணர்ச்சியை உறுதிப் படுத்தி மரபுவழி பெருகவும் வித்திடுகின்றது. காதல் என்பது புலனுணர் இன்பமும் பற்றும் கலந்த ஒரு கலப்புணர்ச்சியே.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணேயுள."

என்ற வள்ளுவப் பெருமானின் வாக்கை எண்ணி ஒர்க. ஒர்

5. LjGÜg5)) GWrff @óïrLlih-Sensuality: 6. Lipp—Sentiment. 7. e5 spir–1101;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/27&oldid=598135" இலிருந்து மீள்விக்கப்பட்டது